உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் மார்ச் முதல் ரூ.1,000 வினியோகம்

விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் மார்ச் முதல் ரூ.1,000 வினியோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் மாதம், 1,000 ரூபாயை, வரும் மார்ச் முதல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.கடந்த 2024 செப்டம்பர் முதல் மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக, இரண்டு கோடி ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதற்கு, 1.66 கோடி பேர் விண்ணப்பித்தனர். அரசு விதித்த நிபந்தனைகள் அடிப்படையில் தேர்வான, 1.15 கோடி பேரின் வங்கி கணக்குகளில் மாதம், 1,000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், 1,000 ரூபாய் கிடைக்காதவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களிடம், 'அரசுக்கு கடும் நிதி நெருக்கடி உள்ளது; அதனால் தான் அனைவருக்கும் உரிமை தொகை வழங்க முடியவில்லை; விரைவில் நல்ல முடிவை அரசு அறிவிக்கும்' என, அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே, உரிமை தொகைக்கு விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும், முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளான வரும் மார்ச் 1 முதல், 1,000 ரூபாயை மாதந்தோறும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

Sundar Pas
ஜன 08, 2025 19:49

இந்த இலவச திட்டங்களுக்கு இந்திய உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களும் உடந்தையாக இருக்கின்றன. இலவசத்தை தடை செய்ய வேண்டி வழக்கு போட்டாலும் தடை செய்வதில்லை. இலவசத்தால் நாடு குட்டிச்சுவராக மாறுவதற்கு நீதிமன்றங்களும் பொறுப்பேற்கவேண்டும்.


M.r Balakrishan
ஜன 08, 2025 02:46

கேவலம் ஆயிரம் ரூபாய்க்கும் இலவசதுக்கம் ஓட்டு போடும் மக்களை பார்த்தால் கல்வி அறிவு இல்லாத மாநிலம் போல தான் தெரிகிறது வடக்கன் மாநிலத்தோடு வேறு ஒப்பீடுகிறீர்கள் கேரளாவ பாருங்க ஒரு இலவசம் கிடையாது அது படித்தவர்கள் உள்ள மாநிலம்


vijai
ஜன 07, 2025 17:30

உச்சநீதிமன்றம் இந்த மாதிரி இலவசத்தை தடை செய்ய வேண்டும் அரசியல்வாதிகள் தங்கள் சொந்த பணத்தில் கொடுத்தால் பரவாயில்லை அரசாங்க பணத்தை கொடுத்து கஜானாவை காலி செய்கிறார்கள்


Kala
ஜன 07, 2025 16:46

Magalir urimai thogai


vijai
ஜன 07, 2025 17:31

இதற்குத்தானே மாடல் அரசு பேரு வச்சாச்சு இனி எதற்கு


vijai
ஜன 07, 2025 16:03

ப்ளீஸ் தமிழ்நாட்டை நாசம் பண்ணாதீங்க


V வைகுண்டேஸ்வரன்
ஜன 07, 2025 14:56

பணம் படைத்தவர்கள் மற்றும் ஏழை மக்களையும் நடுத்தர மக்களையும் வெறுக்கின்றவர்கள், இந்த 1000 ரூபாயை வேண்டாம் என்றும், வாங்குபவர்களைக் கேவலமாகவும் பேசுவார்கள். எழுதுவார்கள்


veera
ஜன 07, 2025 15:58

அந்த ஏழை மக்களுக்காக டாஸ்மாக் மூடலமே வைகுண்டம்.....செய்வீர்களா..நீங்கள் செய்வீர்கள்......உடனே டாஸ்மாக் பணம் படைத்தவர்களுக்கு என்று சொல்லதேயும் பெரியவரே


theruvasagan
ஜன 07, 2025 19:59

வைகுண்டா. விசேஷ பண்டிகை நாளில் டாஸ்மாக் சரக்குக்கு மட்டும் 500 கோடி செலவழிக்க சக்தி இருக்கும் மக்கள் ஏழைகளா


திகழ் ஓவியன், Ajax, Ontario
ஜன 07, 2025 23:26

வைகுண்டா இதெல்லாம் ஒரு பிழைப்பா? வாழ்க வளமுடன்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 07, 2025 14:52

"கேட்ட கேள்விக்கு பதில் இருக்கா ஆபீஸர்.."/ ghee. இந்த செய்தியில் என்ன கேள்வி இருக்கிறது?


அனந்தராமன்
ஜன 07, 2025 14:23

கேவலமாக இருக்கிறது. பெண்களே, வேண்டாம் இந்த காசு.


SUBRAMANIAN P
ஜன 07, 2025 14:18

நம்ம மக்கள் கிட்ட இருக்குற மைனஸ் பாயின்ட அதுதான். எங்கயாவது பணமோ, பொருளோ குடுக்குறானா EEEEEEEEEEE ன்னு பல்ல இளிச்சிகிட்டு போயி அடிச்சி பிடிச்சி ஒலிம்பிக் பதக்கம் வாங்கிட்டா மாதிரி மூஞ்ச வெச்சிப்பாங்க. எவன் குடுக்குறான், அவன் யாரு, பின்புலம் என்ன இதெல்லாம் பாக்குறது இல்ல. இதுல அங்கிட்டு அடிதடி தகராறு , போராட்டம் வேற. நல்ல மக்கள். இன்னும் நூறு வருஷம் ஆனாலும் திருந்தமாட்டாங்க.


Mani . V
ஜன 07, 2025 13:13

தேர்தல் வருதில்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை