உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  50 தொழிலாளர் நலக்கூடம் கட்ட ரூ.20.25 கோடி ஒதுக்கீடு

 50 தொழிலாளர் நலக்கூடம் கட்ட ரூ.20.25 கோடி ஒதுக்கீடு

சென்னை : தொழிலாளர் நலத்துறை சார்பில், தமிழகம் முழுதும், 50 இடங்களில், கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வெடுக்க, தொழிலாளர் நலக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு 20.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தினமும் பணிக்கு செல்லும் கட்டுமான தொழிலாளர்கள், வேலைக்கு அழைக்க வருவோருக்காக அதிக நேரம் சாலையில் காத்திருக்க வேண்டி உள்ளது. வெயில், மழைக் காலங்களில், அவர்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஓய்வெடுக்கவும் ஒரு இடம் வேண்டும் என்று, கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று, ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிகமாக கட்டுமான தொழிலாளர்கள் கூடும் பகுதிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு தொழிலாளர் நலக்கூடம் அமைக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் நான்கு, காஞ்சியில் இரண்டு, செங்கல்பட்டில் மூன்று, பெரு நகரங்களில் தலா இரண்டு மற்றும் மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில், இக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு, தமிழக அரசு 20.25 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இது குறித்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தொழிலாளர் நலக்கூடம் அமைக்கும் பணியை, மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை