உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (மே 29) கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிட்ட பல கட்சிகளின் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c5vgk1up&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது அ,தி,மு,க, மாமன்றக் குழு தலைவரும், கவுன்சிலருமான யாதவ மூர்த்தி என்பவர் எழுந்து பேச முயன்றார். அதேநேரத்தில் தி.மு.க., கவுன்சிலரான சுகாசினி என்பவர் குறுக்கிட்டார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதம் மோதலாக மாற, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். யாதவ மூர்த்தியை, பெண் கவுன்சிலர் கன்னத்தில்அறைந்தார். இருதரப்பும் இடையே எழுந்த கைகலப்பால் அங்கு அசாதாரண சூழலும், குழப்பமும் உருவானது.தி.மு.க. கவுன்சிலரின் நடவடிக்கையை கண்டித்து அ.தி.மு.க.வினர் மேயர் இருக்கை முன்பு சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக மாநகராட்சி கூட்ட அரங்கில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

இராம தாசன்
மே 30, 2025 01:29

சொர்ணாக்காவ சினிமா பார்த்துஇருப்ப / கேட்டுஇருப்ப - நேரிலே பார்த்துஇருப்பய? இங்கே பாரு.. விடியல் ஆட்சியில் தான் இது சாத்தியம்


D.Ambujavalli
மே 30, 2025 01:22

சும்மா சும்மா ஆண்களே அடித்துக்கொள்ளும் செய்திகளைக் கேட்டு அலுத்துப்போய் விட்டது நல்ல மாற்றம் இனி, சட்ட, பாராளு மன்றங்களிலும் இத்தகைய stunt காட்சிகள் செய்து, நன்றாக மக்களுக்கு என்டேர்டைன்மெண்ட் கொடுக்கவேண்டும் மற்ற திமுக பெண்களும் நன்கு பயிற்சி எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்


தமிழ்வேள்
மே 29, 2025 20:23

அந்த பொம்பளை கவுன்சிலர் அடித்த அந்த அடியின் வலி எப்படி இருக்கும் என்பதை துரைமுருகன் உணர ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கும்... திமுகவினருக்குத்தான் மானம் மரியாதை ரோஷம் சுரணை என்று ஒருமண்ணும் கிடையாதே?


சுந்தரம் விஸ்வநாதன்
மே 29, 2025 19:44

நல்ல வேளை , அதிமுக கவுன்சிலரோட வேஷ்டியை உருவி துச்சாதனின்னு பேர் எடுக்கவில்லை


sankaranarayanan
மே 29, 2025 19:00

ஆண்கள் பெண்களை அடித்தால் அறைந்தால் பெண்கள் நியாயக்குழு உடனே ஓடிவரும். ஆனால் இங்கே பெண்கள் ஆண்களை அடித்தால் அல்லது அறைந்தால் எங்கே செல்வது? அமெரிக்க ஜானதிபதி டிரம்ப்பிடம்தான் செல்ல வேண்டும். திராவிட மாடல் அரசு எதையுமே கண்டுகொள்ளாது


Kannada kanmani rajkumar
மே 29, 2025 18:21

திருட்டு த்ரவிஷ்ங்கள் ஒழிந்தால் நாட்டுக்கு நல்லது. அண்ணாமலை ஆட்சியால் தமிழகம் நலம் / வளம் பெறும்


Manaimaran
மே 29, 2025 18:06

அவள் வீட்டுகாரன் நிலை ?


Kanns
மே 29, 2025 17:00

Arrest All Women Criminals Biasedly Shielded by CaseHungryCriminals


Ganesh
மே 29, 2025 16:45

ஆகா.... பாரதியார் கண்ட புதுமை பெண்களை பார்த்து விட்டோம்... ஆண்களுக்கு இணையாக சமத்துவம் கொண்டு வந்து விட்டோம்... இன்னும் பெண்கள் ஆண்களை விட முன்னேற கொலை, கொள்ளை, தம், தண்ணீர் கடவுளே வேண்டி கொள்வோம்...


SRITHAR MADHAVAN
மே 29, 2025 16:07

ஆண் உறுப்பினர் பெண் உறுப்பினரை அறைந்தால், கதையே வித்தியாசமாக இருந்திருக்கும். பாலியல் வன்முறை வழக்கு ஆண் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை