மேலும் செய்திகள்
நாளை 11 மாவட்டம், நாளை மறுநாள் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
4 hour(s) ago | 1
இளையராஜா போட்டோ, பெயரைப் பயன்படுத்த தடை
5 hour(s) ago | 23
புதிதாக 6 அமைச்சர்கள் மீது ஊழல் புகார்
6 hour(s) ago | 4
சென்னை; சமஸ்கிருதம் குறித்து விமர்சித்துள்ள உதயநிதி, ராகுல் கொடுத்துள்ள இத்தாலி கண்ணாடியை மாற்றிவிட்டு, இந்திய கண்ணாடியை போட்டுக் கொள்ள வேண்டும். அப்போது தான் எல்லாம் சரியாக தெரியும் என்று பாஜ தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக் கூறி உள்ளார்.சென்னையில் பாஜ அலுவலகமான கமலாயத்தில் எஸ்ஐஆர் சிறப்பு திருத்தப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பாஜ தேசிய பொதுச் செயலாளர் தருண்சுக் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாஜ தமிழக பொறுப்பாளர் அர்விந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வின் போது பாஜ தேசிய பொதுச் செயலாளர் தருண்சுக் நிருபர்களை சந்தித்தார். அப்போது சமஸ்கிருத மொழியை பற்றி துணை முதல்வர் உதயநிதி விமர்சித்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு தருண்சுக் அளித்த பதில் வருமாறு; உலகத்தில் மிகவும் ஆரோக்கியமாக இருப்பது இந்து மதம். யாருக்கும் எதிரானது இந்து மதம் அல்ல. அந்த மதத்தை பார்த்து டெங்கு கொசு என்று சொல்கிறார் என்றால், அவர்(உதயநிதி) போட்டு இருக்கும் கண்ணாடி.. ராகுல் கொடுத்துள்ள இத்தாலி கண்ணாடி. அந்த கண்ணாடியை மாற்றிவிட்டு இந்திய கண்ணாடியை போட்டால் எல்லாம் சரியாக தெரியும். கண்ணாடியை அவர் மாற்ற வேண்டும். இவ்வாறு தருண்சுக் பேட்டியளித்தார். அவரைத் தொடர்ந்து நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது;சமஸ்கிருதம் பற்றி உதயநிதி விமர்சித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எந்த மொழியும் செத்த மொழி கிடையாது. எல்லாரும் நாலு மொழி பேசுகின்றனர். அவரவருக்கு அவர்களின் மொழி பெரியது. தமிழகத்தில் சமஸ்கிருதம் பேசுபவர்கள் இருக்கின்றனர். எவ்வளவு வன்மையோடு துணை முதல்வர் இருக்கின்றார் என்பதற்கு இது ஒன்றே சான்று. பீஹாரில் என்ன செய்திருக்கிறோம் என்று சொல்லி நாங்கள் வாக்கு கேட்டோம். தமிழகத்தில் திமுக என்ன செய்திருக்கிறது என்று சொல்லி ஓட்டு கேட்கட்டுமே? இன்னமும் வட இந்தியா,தென் இந்தியா, ஆரியன், திராவிடன் என்று தான் பேசுகின்றனர்.நான்கு ஆண்டுகளாக என்ன வேலை செய்தீர்கள் என்று சொல்லுங்கள்? மக்கள் ஓட்டு போடட்டும், நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எந்த வேலையும் செய்யாததால், டில்லி, வட இந்தியா, தென் இந்தியா என்று பேசுகின்றனர்.இந்த முறை தமிழக வாக்காளர்கள் இதை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை. முதல்வரோ, துணை முதல்வரோ இதுவரை வாயைத் திறந்து அவர்கள் செய்த சாதனையை சொல்லவில்லை என்னும் போதே தெரிகிறது... இந்த தேர்தலை அவர்கள் எதிர்கொள்ள பயப்படுகிறார்கள்.இவ்வாறு அண்ணாமலை பேட்டியளித்தார்.
4 hour(s) ago | 1
5 hour(s) ago | 23
6 hour(s) ago | 4