உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை அண்ணா காப்பாற்றுங்கள்: ரத்த காயங்களுடன் கதறும் பா.ஜ., நிர்வாகி

அண்ணாமலை அண்ணா காப்பாற்றுங்கள்: ரத்த காயங்களுடன் கதறும் பா.ஜ., நிர்வாகி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: 'அண்ணாமலை அண்ணா என்னை காப்பாற்றுங்கள்' என ரத்த காயங்களுடன் வீடியோ வெளியிட்ட பா.ஜ., நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை, 38; கூட்டாம்புளி பகுதியில் பைக் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். பா.ஜ., கலை மற்றும் கலாசாரப் பிரிவில் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.வீட்டை புதுப்பித்து கட்டி வருவது தொடர்பாக இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி பாலமுருகனுக்கும் தகராறு இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ராஜதுரை தன் வீட்டின் அருகே நின்றபோது, பாலமுருகன், அவரது தந்தை பால்ராஜ் உட்பட ஆறு பேர் அரிவாள் மற்றும் ஆயுதங்களால் திடீரென அவரை தாக்கியுள்ளனர்.இதில், ராஜதுரை, அவரது மனைவி ஜெயந்தி, உறவினர்கள் கோகுல்ராஜா, ஜெயராஜ், நவீன் ஆகியோர் தாக்கப்பட்டனர். காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.ரத்தக் காயங்களுடன் பா.ஜ., நிர்வாகி ராஜதுரை வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.அந்த வீடியோவில் அவர், 'தி.மு.க.,வினர் என்னை வெட்டிவிட்டனர்; அண்ணாமலை அண்ணா என் உயிரை காப்பாற்றுங்கள். போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை' என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Natchimuthu Chithiraisamy
ஜூலை 14, 2025 20:32

பாலமுருகன் பையன் பால்ராஜ் ஆகிவிட்டான் ஜாகிரதையாக இருக்க வேண்டும் என்பது பல பேருக்கு தெரியாது


surya krishna
ஜூலை 14, 2025 15:29

Rowdikalin model arasu oliga


venugopal s
ஜூலை 14, 2025 15:03

தேர்தல் நாள் நெருங்க நெருங்க இது போன்ற அனுதாப அலை வீசும் நாடகங்கள் நிறையவே அரங்கேறும்!


pmsamy
ஜூலை 14, 2025 11:34

அண்ணாமலைக்கும் கொலை முயற்சி சம்பவத்துக்கும் சம்பந்தம் என்னவென்று காவல்துறை விசாரிக்க வேண்டும்


R.P.Anand
ஜூலை 14, 2025 11:23

தண்ட சோறுகள் ஊர்வம்பை வளர்த்து விட்டு அப்புறம் அரசியல் வாதி ஒருத்தனை இழுத்து வந்து கட்ட பஞ்சாயத்து செய்து காவல்துறையை கட்சி கட்டுப்பட்டில் வைப்பது. இது தான் அரசியல் என்றால் சாதாரண பொது மக்கள்.... இப்படியே தான் அசிங்கம் பிடித்த ஆட்சிகள் மாறி மாறி நடக்கிறது. பொது ஜனம் யேன் ஓட்டு போடவில்லை என்பது தெரிகிறதா


தஞ்சை மன்னர்
ஜூலை 14, 2025 10:58

இது என்ன புது டிரண்ட இருக்கு


தஞ்சை மன்னர்
ஜூலை 14, 2025 10:52

அண்ணாமலை கட்சியில் திரும்ப பதவி வேணும் என்றால் கேட்டு வாங்கி கொள்ளலாம் அதுக்காக இதெல்லாம் டூ மச்


அப்பாவி
ஜூலை 14, 2025 10:39

காவல்துறை மேலே நம்பிக்கை போய் ரொம்ப வருசமாச்சு


Anantharaman Srinivasan
ஜூலை 14, 2025 10:33

உன் பக்கத்து வீட்டில் திமு கட்சி விஷபாம்பு இருக்கும் போது நீ உஷாரா இருந்திருக்க வேண்டாமா? போலீஸ் இவர்களுக்கு தினமும் சல்யூட் அடிக்கும். S.P க்கு கூட அப்புறம் தான்.


மூர்க்கன்
ஜூலை 14, 2025 12:30

அப்போ திமுகவில் சேர்த்துட்டா நல்ல மரியாதையும் கிடைக்கும் என்கிறீரா?? எப்போ திமுக கொள்கை பரப்பு செயலாளர் மாதிரி பேச ஆரம்பிச்சீங்க??


Arjun
ஜூலை 14, 2025 10:22

ஆளும் அராஜக ஆட்சியில் இருக்கிறோம் என்ற திமிர் அதனால் இதுமாதிரி செய்ய தூண்டுகிறது இதை காவல் சரி? செய்து விடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை