உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம்; பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம்!

பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம்; பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம்!

பெங்களூரு: ''பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம்,'' என்று கூறி, பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆச்சார்யா பாடசாலா (ஏ.பி.எஸ்.,) பள்ளி மற்றும் கல்லூரியின் 90வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அவர், தாம் படித்த பள்ளி ஆண்டு விழாவுக்கு, வீடியோ பதிவு மூலம் நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் ரஜினிகாந்த் கூறியதாவது: ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் எனது உயர்வுக்கு அடித்தளமாக அமைந்தது. எனது வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். கன்னட வழி வகுப்பில் படிக்கும் போது, நான் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தேன். நான் 98 மதிப்பெண் எடுத்தேன். நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் என் அண்ணன் என்னை ஆங்கில வழி கல்விக்கு சேர்த்தார். கன்னட மொழி பள்ளியில் இருந்து ஆங்கில மொழி பள்ளிக்கு மாறிய போது படிப்பில் சிரமங்களை எதிர்கொண்டேன். மன உளைச்சலுக்கு ஆளானேன். பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், எனது சிரமத்தைப் புரிந்து கொண்டு பாடம் நடத்தினார்கள். 10 வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் மட்டுமே பெற்றேன். சில காரணங்களால் கல்லூரியைத் தொடர முடியவில்லை. பள்ளி நாட்களில் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் கலந்துகொண்டேன். போட்டிகளில் பங்கேற்பதற்கு முன், வகுப்பில் பலவிதமான கதைகளைச் சொல்வேன். நான் பார்த்த திரைப்படங்களை நண்பர்கள் முன்னிலையில் நடித்துக் காட்டுவது வழக்கம். இது எங்கள் ஆசிரியர்களுக்கும் தெரியும். அதை கவனித்த அவர்கள், போட்டிகளில், குறிப்பாக நாடகத்தில் பங்கேற்க ஊக்கம் அளித்தனர். பள்ளியில் ஏற்பாடு செய்திருந்த, சாண்டாலா என்ற நாடகத்தில் முதல் முறையாக நடித்தேன். அதனை மறக்க முடியாது. அந்த நாடகத்துக்குப் பரிசு கிடைத்தது. கேடயத்தை வென்றோம். எனக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. இப்போது என்னால் முடிந்தவரை குழந்தைகளை மகிழ்விக்க முயற்சிக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் ஏ.பி.எஸ்., பள்ளி மற்றும் கல்லூரி தான். அதுதான் பெருமை. நாங்கள் அங்கு கழித்த நாட்கள், நாங்கள் விளையாடிய விளையாட்டுகள், மறக்க முடியாது. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 18, 2025 15:04

எனக்குக்கூட பள்ளி, கல்லூரிகள் நினைவெல்லாம் வருது ..... நான் எழுதுனா தினமலர் போடுமா ?


Jones
ஜன 18, 2025 14:34

மக்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பழைய நினைவுகள் பதிவு அருமை. அவருடைய கருத்து மிகவும் பிடித்திருக்கிறது வளரும் குழந்தைகளுக்கு அவருடைய கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 18, 2025 14:03

சினிமாவில் நடிகைகளுடன் குத்தாட்டம் போடுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்திருப்பார்களோ?


INDIAN Kumar
ஜன 18, 2025 13:30

இறை அருள் தான் அனைத்துக்கும் காரணம் முன் செய்த வினை இந்த பிறவியில் பேர் புகழ்


veeramani hariharan
ஜன 18, 2025 13:25

Why he is wearing black colour shirts . Whether he is also AVANA. Pucca Business fellow. Where he is going to take his money when he lefts . Still ...... we, all fools.Nonsense


சம்பா
ஜன 18, 2025 13:25

இவன் சிறந்த வியாபாரி


angbu ganesh
ஜன 18, 2025 14:10

உனக்கு சம்பாரிக்க துப்பு இல்லேன்னா .....டு போ அவர் என்ன ஊரார் பணத்தை ஏமாத்தி சம்பாரிகளை இந்த வயசிலேயும் ஒழைக்காரர் ஏன் இந்த கமெண்டை ஸ்டாலின் கிட்ட கேளேன் அவ்ளவு தைரியம் எல்லாம் உனக்கில்லை அவர் வயசுல இந்நேரம் நீ இருப்பியா வயித்தெரிச்சல்


S.L.Narasimman
ஜன 18, 2025 13:05

இவரது ஏதோ ஒரு படம் ரிலீசு ஆக இருக்கிறது போலும். சரியான வியாபாரி.


surya krishna
ஜன 18, 2025 12:59

yaar ketta unkitta veena ponauyanalakara naayea...


ManiK
ஜன 18, 2025 12:51

அதான் முன்னேறியாச்சு தானே, இனிமேலாவது மொக்க படம் நடிக்காம ரிடையர் ஆகி எங்கள நிம்மதியா இருக்க விடுங்க.


angbu ganesh
ஜன 18, 2025 14:11

உன்ன அவர் படம் பக்க உன்ன கூப்பிடற மொக்க விஜய் படத்தை எல்லாம் பாப்ப ஏன் அமிதாப் நடிக்கிறார் தெலுங்குல வயசவங்க நடிக்கறாங்க உனக்கெங்க எரியுது


vijai
ஜன 18, 2025 16:55

உன்னை யாரெல்லாம் அவர் படம் பார்க்க வெத்தல பாக்கு கூப்பிட்டது வாய பொத்திகிட்டு இரு


Senthoora
ஜன 18, 2025 17:15

அமிர்தாப் கதாநாயகனாக நடிக்கவில்லை. கேஸ்ட் ரோல்லில்தான்.


Kayd
ஜன 18, 2025 12:41

இப்போ தான் புரியுது Basha டயலாக் "நான் ஒரு மார்க் வாங்கினா 100 மார்க் வாங்கின மாதிரி" எங்க இருந்து வந்துச்சு னு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை