உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீங்களே பாருங்க, அடுத்த வருடம்... மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

நீங்களே பாருங்க, அடுத்த வருடம்... மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

சென்னை: 'உங்களின் வீட்டில் இருப்பவர்களை ஜனநாயகக் கடமையை முறையாக செய்ய சொல்லுங்கள். இதுவரை ஊழலே செய்யாதவர்களை தேர்வு செய்யுங்கள்' என்று மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் த.வெ.க., தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 16 மாவட்டங்களில் சுமார் 88 தொகுதிகளைச் சேர்ந்த 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். மேலும், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g6w4o9fx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 முன்னதாக அவர் பேசியதாவது; படிப்பும் சாதனை தான். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட படிப்பில் மட்டுமே சாதிக்க வேண்டும் என்று நினைப்பது சாதனை கிடையாது. ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப நினைத்து அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை. நீட் மட்டும் தான் உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப, ரொம்ப பெரியது. எனவே உங்கள் மனதை ஜனநாயகமாக வைத்து கொள்ளுங்கள். ஜனநாயகம் என்ற ஒன்று இருந்தால் தான், இந்த உலகில் உள்ள அனைத்து துறைகளும் சுதந்திரமாக இருக்க முடியும். முறையான ஜனநாயகம் இருந்தால் தான் அனைவருக்கும் அனைத்தும் சமமாக கிடைக்கும். எனவே, உங்களின் வீட்டில் இருப்பவர்களை ஜனநாயகக் கடமையை முறையாக செய்ய சொல்லுங்க. இதுவரை ஊழலே செய்யாதவர்களை பார்த்து தேர்வு செய்யுங்கள். காசு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயித்திடலாம் என்ற கலாசாரத்தை ஆதரிக்காதீர்கள். காசு வாங்காதீங்க. உங்கள் பெற்றோர்களிடமும் எடுத்துச் சொல்லுங்க. நீங்களே பாருங்க அடுத்த வருடம் வண்டி, வண்டியா கொண்டு வந்து கொட்டுவாங்க. என்ன பண்ண வேண்டும் என்று உங்களுக்கு நல்லா தெரியும். பெற்றோர்களுக்கு சின்ன வேண்டுகோள், உங்கள் குழந்தைகள் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டாம். அவர்களை சுதந்திரமாக விடுங்கள். அவங்க அவங்களுக்கு பிடித்த துறையில் அவர்கள் நிச்சயமாக சாதித்து காட்டுவார்கள்.ஜாதி, மதம் வைத்து பிரிவினை வளர்க்கும் சிந்தனை பக்கமே போயிடாதீங்க. விவசாயிகள் என்ன ஜாதி, மதம் பார்த்தா விளை பொருட்களை விளைவிக்கிறார்கள். மழை, வெயிலில் ஜாதி, மதம் இருக்கறதா? எப்படி, போதைப் பொருட்களை ஒதுக்கி வைத்தீர்களோ, அதே போல ஜாதி, மதத்தை தூரமா ஒதுக்கி வைப்பது அனைவருக்கும் நல்லது. ஒன்றிய சிவில் சர்வீஸ் தேர்வில் கூட சாதி சாயம் பூசுவது போன்ற கேள்வி கேட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எதுவாக இருந்தாலும் அறிவியல் பூர்வமாக மாணவர்கள் அணுக வேண்டும். ஏ.ஐ., தான் இந்த உலகத்தை எதிர்கொள்ள ஒரே வழி.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Senthoora
ஜூன் 08, 2025 20:47

என்ன பேசுவார். என் உச்சி மண்டை கிர்ர்...ங்குது, இல்லாட்டி, நான் அடிச்சா ஒண்டரை டன் வெயிட்டு.


துர்வேஷ் சகாதேவன்
மே 30, 2025 18:13

மகாராஷ்டிரா ஷிண்டே வாக மாரி விட்டார் BOTTLE மணி , பிஜேபி கூட்டணி இல்லை என்றால் கட்சி இரண்டாகும் .இதே நிலை ADMK க்கு வரும் விரைவில்


துர்வேஷ் சகாதேவன்
மே 30, 2025 18:00

அரசியல் வாதி யாவது ஊழல் பணத்தில் தேர்தலுக்கு ஆளுக்கு 1000, 2000 என்று கொடுகிறார்கள் ஆனால் இவர் பாதி தொகை தான் கணக்கு, மீதி கருப்பு பணம் இப்படி வாங்கி 40 வருடம் சேர்த்து, டிக்கெட் என்று நம்மிடம் பிடுங்கிய மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, wasted fellow.


துர்வேஷ் சகாதேவன்
மே 30, 2025 17:59

த வெ கா இரண்டு ஆண்டு கட்சி அதில் மக்கள் பயன்பாடும் வழியில் ஒன்றும் செயல்பாடுகள் கிடையாது. 200 கோடி வாங்கும் ஒருவன் ஒரு சமூகப் பணியும் செய்யாமல் தன்னை ரசிக்கும் ரசிகர்களின் நம்பிக்கையை மூடநம்பிக்கையாக மாற்றி அரசியல் வர நினைத்து அதற்குப் பின்பு நன்மை செய்வான் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். முதல் மாநாட்டில் விஜய் சொன்னது என்ன யாரையும் நாம் தாக்காமல் அரசியல் செய்வோம் ஆனால் என்ன நடக்கிறது திமுக என்ற மாபெரும் மக்கள் படையை மக்கள் கூட்டத்தை எதிர்த்து அரசியல் செய்தால் தான் உங்களுக்கு வாழ்வு என்று தெரிகிறது முடிந்தால் மரியாதையாக அரசியல் செய்யுங்கள் இல்லை என்றால் அவரை விட்டு விடுங்கள் அவர் நடித்து பல கோடிகள் சேர்த்துக் கொள்ளட்டும்


Narayanan
மே 30, 2025 16:05

இதுவரை ஊழல் செய்யாதவரை தேர்ந்து எடுங்கள் . அவர் வந்ததும் ஊழலை செய்வார் . ஓட்டுபோட்டவன் ஊழல் செய்வதை கேட்டால் முன்னர் இருந்தவர்கள் ஊழல் செய்யும்போது சும்மாதானே இருந்தீர்கள் என்று நம்மை கேள்வி கேட்டு நம்மை அசிங்கப்படுத்திவிடுவார்கள் .


SB
மே 30, 2025 16:05

Photo shoot கூட இஸ்லாமிய குடும்பத்துடன்!!! இது அரசியல் stunt தானே ஜோசப் சார்.


panneer selvam
மே 30, 2025 16:32

It is the fashion of Tamil Politicians especially in front of cameras .


மூர்க்கன்
மே 31, 2025 05:10

உனக்கு ஏன் எரியுது??


HoneyBee
மே 30, 2025 16:03

இவர் என்ன பேசறான்னே இவருக்கே தெரியாது. சும்மா அடிச்சி விடு.. அணில் குஞ்சுகள் விசில் அடிச்சி ரோட்டில குடிச்சிட்டு கவுந்து படுத்துட்டு இருப்பானுக... நீ படத்தில் கூட நல்ல விஷயங்களை சொன்னது இல்லை. இப்ப வந்து உருட்டற


R.MURALIKRISHNAN
மே 30, 2025 15:16

அடுத்த படத்திற்கான விளம்பரம் ஜனநாயகம். நடிகர்களை விடுத்து நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்.


senthilanandsankaran
மே 30, 2025 15:09

முதலில் சினிமாவில் ஜாதி மதத்தை கேவளபடுதாமல் எடு.. எத்தனை படத்தில் ஐயர் ஜாதியை நீ கேவலப்படுத்தி நடித்தாய்.ஒருத்தன் உன் கடவுளை அடிப்பேன் என்றவனை கண்டி....பிறகு பேசு...நீயெல்லாம் ஒரு திட்டமுடன் இன்று மாணவர்களுக்கு கிஃப்ட் கொடுத்து நாளைக்கு அவர்கள் ஓட்டை கேட்கிறாய்..உனக்கு என்ன தகுதி இருக்கு அடுத்தவன் காசு கொடுகுறான்னு சொல்ல


நாஞ்சில் நாடோடி
மே 30, 2025 15:02

தேசிய சிந்தனை சிறிதும் இல்லாத ஆபத்தான பிரிவினைவாதிகள்...