சென்னை: ''பாஜ உடன் கூட்டணி வைத்து மங்களூரில் சட்டமன்ற உறுப்பினர் ஆனது நானா, அண்ணன் திருமாவளவனா,'' என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: நீங்கள் திராவிடர்கள் என்கிறீர்கள். நாங்கள் தமிழர்கள் என்கிறோம். எனவே அந்த அடிப்படையில் தான் தேர்தலை சந்திக்க உள்ளோம். நீங்கள் திட்டமிட்டு எங்கள் அடையாளத்தை, மொழியை அழிக்க நினைக்கிறீர்கள். உங்களுக்கு நிறைய சான்றுகள் தர முடியும். அதற்கு தனியாக மேடை போடுகிறேன். திராவிடனா, தமிழனா என்றால் எனக்கு ஒரு கேள்வி வருகிறது. நான் ஏன் திராவிடனாக இருக்க வேண்டும். என்ன நாகரிகம்!
கீழடி என்பது என்ன நாகரிகம். இவர்கள் திராவிட நாகரிகம் என்கிறார்கள். அவர்கள் இந்திய நாகரீகம் என்கிறார்கள். 2,200 ஆண்டுகளுக்கு முன்பு யார் திராவிடர்கள்? ஏது கன்னடம், ஏது தெலுங்கு? நீங்களே சொல்லுங்கள். அப்படி எதுவும் இல்லை. எனவே தமிழர் நாகரிகம் என்று சொல்வதில் என்ன பிரச்னை? திட்டமிட்டு எனது பெருமைகளையும், அடையாளங்களையும் அழித்து நினைக்கிறீர்கள். தமிழை திராவிடம் வளர்க்கிறதா? பெருவுடையார் கோயிலை திராவிட கட்டடக் கலை என்கிறீர்கள். திராவிட நாகரீகம், திராவிட பண்பாடு, திராவிட திருநாள் என்று கூறுகிறீர்கள். அப்ப வெறி வருமா? வராதா? அதனால் இது சண்டை. தமிழில்…!
வணிகர்களை அழைத்து மாநாடு போடும் தமிழக முதல்வர் ஸ்டாலின் Rainbow என்பதை தமிழில் ரெயின்போ என்று எழுத சொல்கிறார். 80,000 முதுநிலை ஆசிரியர்கள் தமிழில் தோல்வி அடைகிறார்கள். 50,000 பேர் தமிழில் தேர்வு எழுதாமல் தோல்வி அடைந்து விடுகிறார்கள்.வேறு மொழி வளர்க்கப்படுகிறது என்றால் Tanglish வளர்க்கப்படுகிறது. பாஜ உடன் கூட்டணி வைத்து மங்களூரில் சட்டமன்ற உறுப்பினர் ஆனது நானா, அண்ணன் திருமாவளவனா? எதிரி
வாஜ்பாய்க்கு வீர வணக்கம் என்று சொல்வது அரசியல் நாகரிகம் என்கிறார். நான் ஒரு மேடை போட்டு பாரதியை பேசுவது அநாகரிகம் ஆகிறதா? என் அண்ணன் எப்படி விமர்சனம் செய்தாலும் பதில் கருத்து சொல்லிவிட்டு ஒதுங்கி போய் கொண்டிருக்கிறேன். ஏனெனில் மோதலை எனக்கும், என் அண்ணனுக்கும் இடையில் மாற்றி விட்டு திராவிடன் மஞ்சள் குளிப்பான். சண்டை எனக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையிலா? எனக்கு எதிரி என்ன விசிகவா? எங்க அண்ணனை எதிர்க்கவா நான் கட்சி ஆரம்பித்தேன். இவ்வாறு சீமான் கூறினார்.