உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாரதியின் பிறந்த நாளை தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும்: சீமான் கோரிக்கை

பாரதியின் பிறந்த நாளை தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும்: சீமான் கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' பாரதியின் பிறந்த நாளை, 'தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்' எனக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும்'', என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.'தமிழ்த்தாத்தா' உ.வே.சாமிநாதையரின் பிறந்த நாளான பிப்ரவரி 19ம் தேதியை, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும்' என முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி இன்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். இவரது கோரிக்கையை ஏற்பதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், உ.வே.சாமிநாதையரின் பிறந்தநாளான பிப்.,19ம் தேதி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா. பிறந்த நாள், 'தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்' எனக் கொண்டாடப்படும் எனும் திமுக அரசின் அறிவிப்பு குறித்தான செய்தியைக் கேள்வியுற்றேன். தமிழ் இலக்கிய உலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது பாரதி தான். அவர் காலம்தான் இலக்கிய உலகில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது. ஆகவே, பாரதியின் பிறந்த நாளை, 'தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்' எனக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும்.'தமிழ்த்தாத்தா' உ.வே.சா.வின் ஈடில்லா பங்களிப்பைப் போற்ற அவருடைய பிறந்த நாளை, 'தமிழிலக்கியப் பாதுகாப்பு நாள்' எனக் கொண்டாடுவதே சரியாக இருக்கும் , தமிழக அரசு அதனை மாற்ற வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sampath Kumar
டிச 11, 2024 09:18

தமிழ் ள்ளையாகிய பாதுகாப்பு மறுமலர்ச்சி இரண்டுமே கொண்டாட படவேண்டிய ஓன்று தான் ஆனால் யாரை ஏதற்கு சவுரவிற்பது என்பதை தமிழ் ஆர்வலர்கள் தான் முடிவு செய்யவேண்டும் சீமானோ அரசோ இல்லை


RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 08:48

அந்தணர்கள் ஓட்டை பெற போட்டா போட்டி ...... ஆட்சியில் அமர்ந்த பிறகு மீண்டும் நூலறுப்பு, தாக்குதல், உங்க வகுப்புலதான் ஆட்டிச குழந்தைகள் சாஸ்தி என்ற கிண்டல் எல்லாம் தொடரும் ......


iyer folsom
டிச 11, 2024 08:14

இருவரும் தமிழ் தொண்டு ஆற்றியவர்கள். சீமான் சொல்லுவது உண்மை


Palani Ramachandran
டிச 11, 2024 05:57

இவர் கோரிக்கை எல்லாம் விடமாட்டார்.இவர் பிரபாகரன் தம்பி ஆயிற்றே.ஆணைதான் இடுவார்.


Mani . V
டிச 11, 2024 05:40

வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் தெலுங்....கள்.


ராமகிருஷ்ணன்
டிச 11, 2024 05:28

பாரதி பிராமணர். திராவிட சித்தாந்தபடி எந்த சிறப்புகளுக்கும் தகுதி இல்லாதவர். ஆனால் தனிபட்ட முறையில் தனக்கு கீழ் வேலை செய்ய பிராமணனுக்கு முன்னுரிமை, இதான் திராவிட கொள்கை.


Sriram Ranganathan
டிச 11, 2024 05:25

பாரதியார் ஒரு பிராமணர் என்பது சீமானுக்கு தெரியாதா.


நிக்கோல்தாம்சன்
டிச 11, 2024 04:52

ஆத்தீ இது வேற லெவல்


Jagan (Proud Sangi)
டிச 11, 2024 04:10

வெறுப்பு அரசியலை மட்டுமே நப்பியுள்ள திரவிட மற்றும் NTK விற்கு கேள்வி - இந்த செய்தியில் சொல்ல பட்ட ரெண்டு பேருமே ஆரியர்கள். பரவாயில்லையா ?


vadivelu
டிச 11, 2024 07:15

தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். வீட்டில் வேறு மொழி வைத்துள்ள தமிழர்கள் இல்லை. ஆரியர்கள் கைபர் மூலம் படை எடுத்து வந்த பாபரின் கூட்டம். காலிடுவேல் உருட்டி விட்ட விட்ட கதை ஆரியன் என்பது.


தாமரை மலர்கிறது
டிச 11, 2024 01:24

சீமான் பிஜேபியுடன் கூட்டணி வைக்க விருப்படுகிறார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை