வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த பைத்தியம் தொல்லை தாங்க முடியவில்லை.
உண்மையில் இந்த கருத்தால் சிரிப்பை அடக்கமுடியவில்லை
மேலும் செய்திகள்
ஆட்சியாளர்கள் பாடம் கற்பது எப்போது?
22-Oct-2025
''சுயமரியாதை குறித்து அ.தி.மு.க.,வினர் பேசக்கூடாது,'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திருச்சியில் அவர் நேற்று அளித்த பேட்டி:
மொத்த கடற்பரப்பையும் தன்னுடையது போல் நினைத்து, தொடர்ச்சியாக தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்கிறது. எங்கள் மீன் வளத்தை, தமிழக மீனவர்கள் திருடிச் செல்கின்றனர் என காரணம் சொல்கின்றனர். இதெல்லாம் ஏற்புடையதா? நடிகர் விஜயை பார்க்க, தணியாத ஆர்வத்தோடு மக்கள் கூடுகின்றனர்; அது தவறு என நடிகர் அஜித் சொல்லி உள்ளார். அந்த கருத்தில் நானும் உடன்படுகிறேன். தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் தலைவரை பார்க்க கூட்டம் கூடுகிறது; அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அமெரிக்கா போல அனைத்து தலைவர்களும் பேச, 'டிவி'க்களில் நேரம் கொடுங்கள்; அவர்கள் தங்கள் கொள்கைகளை மக்களிடம் பேசட்டும். இதில் யாருக்கும் இடைஞ்சல் ஏற்படப் போவதில்லை. அதை விடுத்து, எல்லா தலைவர்களையும் சாலைக்கு கொண்டு வந்துவிட்டு, கூட்ட நெரிசலில் மக்கள் இறந்து விட்டனரே என கூப்பாடு போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. கோவையில் பெண்ணுக்கு எதிராக நடந்த பாலியல் சம்பவம் போல, நிறைய சம்பவங்கள் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பல சம்பவங்கள் வெளியுலகிற்கே வருவதில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. பாதுகாப்பற்ற சூழல் தான் உள்ளது; நினைத்தாலே நடுக்கமாக இருக்கிறது. தவறிழைத்தோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான், இது மாதிரியான சம்பவங்களை தடுக்க முடியும். மது மற்றும் கஞ்சா போதையே, இப்படிபட்ட நிகழ்வுகளுக்கு காரணம். ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாத தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் சமூக நீதி, சமத்துவம், துரோகம் குறித்தெல்லாம் பேசக்கூடாது. ஜெயலலிதா காலில் விழுந்தனர்; பின், அவர் சென்ற கார் டயரில் விழுந்தனர்; தொட்டு கும்பிட்டு மகிழ்ந்தனர். அவர்கள் ஒரு நாளும் சுயமரியாதை குறித்து பேசக் கூடாது. அ.தி.மு.க.,வினர் நிமிர்ந்து நின்றதை யாராவது பார்த்துள்ளனரா? இதை விமர்சனமாக சொல்லவில்லை; ஆனால், அது தான் உண்மை. இவ்வாறு சீமான் கூறினார். - நமது நிருபர் -
இந்த பைத்தியம் தொல்லை தாங்க முடியவில்லை.
உண்மையில் இந்த கருத்தால் சிரிப்பை அடக்கமுடியவில்லை
22-Oct-2025