உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரும் 30ல் மாநாடு நடத்தி மரங்களோடு பேசுகிறார் சீமான்

வரும் 30ல் மாநாடு நடத்தி மரங்களோடு பேசுகிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில், வரும் 30ம் தேதி 'மரங்களோடு பேசுவோம்' மாநாடு நடக்க உள்ளது. நா.த.க., சார்பில் நடத்தப்பட்ட, ஆடு, மாடுகள் மாநாடு, மக்களிடையே பேசு பொருளானது. இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, அருங்குளம் கூட்டுச்சாலை, மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில், வரும் 30ம் தேதி, மரங்கள் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டில் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, 'மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காக பேசுவோம்' என்ற தலைப்பில் பேச உள்ளார். மாநாடு நடக்கும் இடத்துக்கு சில நாட்களுக்கு முன் சென்ற சீமான், அங்கிருக்கும் மரங்களை பார்த்து பேசியதோடு, அவற்றுக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Oviya Vijay
ஆக 28, 2025 17:10

மரங்களின் மாநாடு முடிந்த கையோடு நேராக கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்குச் சென்று உள்நோயாளியாக தன் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்... ஏனென்றால் ஊரில் உள்ளவர்கள் அத்துனை பேரையும் பைத்தியக்காரப் பயலுங்க பைத்தியக்காரப் பயலுங்க என்று சீண்டிக் கொண்டிருந்த தானும் ஒரு பைத்தியம் தான் என்று உணரும் நாள் வெகு தொலைவிலில்லை...


MP.K
ஆக 28, 2025 13:16

அருமையோ அருமை


joe
ஆக 28, 2025 12:52

என்னதான் மரத்தோடு பேசினாலும் இந்திய உணவுப்பொருள்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமல் நமக்கே நாம் பயன்படுத்தனும். .அதிக மக்கள் தொகை கொண்ட நாம் நம் உணவுப்பொருள்களை நாமே பயன்படுத்தனால்தான் விலைவாசி கட்டுக்குள் இருக்கும் .சமநிலை பொருளாதாரம் இருந்தால் மட்டுமே போதுமானதே ஆகும் .அதிகம் ஆசைப்பட்டால் இப்போது நடந்துகொண்டிருக்கும் அமெரிக்க வரி விதிப்பை நம்மை பாதிக்கிறது .எனவே அதிக மக்கள் தொகை கொண்ட நம்மை சுற்றியே உலக பொருளாதாரம் உருண்டோடும் .நம் உணவுப்பொருளைகளை வெளியே அனுப்பக்கூடாது .விவசாயிகளுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் .மான்யம் மூலம் மட்டும் உதவவேண்டும் .உணவுப்பொருள் ஏற்றுமதியை அனுமதிக்கக்கூடாது .சம நிலை பொருளாதாரமே போதும் .உலக அரங்கில் 2ம் இடம் 3ம் இடம் இதெல்லாம் தேவை இல்லை .சமநிலை பொருளாதாரமே நமக்கு சரியான தீர்வு .


Raja Mohammad
ஆக 28, 2025 12:32

மரம் மயின்ட் வாய்ஸ் : யாரும் இல்லாத கடைக்கு யாருக்கு டி ஆத்ர ?


saravan
ஆக 28, 2025 10:51

விண்ணோடும் மண்ணோடும் கூட பேசுவாரு. இதென்ன பிரமாதம்


RAJAKUMAR
ஆக 28, 2025 10:43

இவரை கேலி செய்யும் நபர்கள், பிற்காலத்தில் எண்ணி பார்ப்பார்கள்


arunachalam
ஆக 28, 2025 10:40

இந்தாள் வீட்டுல கதவு, டேபிள், நாற்காலி எல்லாமே பிளாஸ்டிக்கா தகரமா?


Saravana Kumar
ஆக 28, 2025 10:37

ஐயோ இவங்க படுத்துற பாடு இருக்கே முடியல அப்படின்னு மரம் அழுவ போகுது


venugopal s
ஆக 28, 2025 09:56

மாநாட்டுக்கு மரங்கள் மட்டும் வந்தால் போதும் !


R Dhasarathan
ஆக 28, 2025 09:38

இந்த பிரபஞ்சம் அவரை வாழவைக்கும்.


சமீபத்திய செய்தி