உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாடு முழுவதும் ரூ.4,650 கோடி பறிமுதல்: தமிழகத்தில் மட்டும் ரூ.460 கோடியாம்!

நாடு முழுவதும் ரூ.4,650 கோடி பறிமுதல்: தமிழகத்தில் மட்டும் ரூ.460 கோடியாம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நாடு முழுவதும் முதற்கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன்பு, இதுவரை ரூ.4,650 கோடி மதிப்புள்ள நகை, பணம், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என இந்திய தேர்தல் கமிஷன் தகவல் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக நாடு முழுவதும் ரூ.4,650 கோடி மதிப்புள்ள மதுபானம், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரொக்கம், ரூ.395.39 கோடி, மதுபானங்கள் ரூ.489.31 கோடி, போதை பொருட்கள் ரூ.2,068.85 கோடி, இலவச பொருட்கள் ரூ.1,142.49 கோடி ஆகும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=56cgiid1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் மட்டும் மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரூ.460 கோடி மதிப்புள்ள நகை, பணம், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரொக்கம் ரூ.53 கோடி, போதை பொருட்கள் ரூ.293 கோடி, தங்கம், வெள்ளி பொருட்கள் ரூ.78 கோடி, மதுபானங்கள் ரூ.4.4 கோடி, இலவசப் பொருட்கள் ரூ.31 கோடி ஆகும்.

ராஜஸ்தானில் ரூ. 778 கோடி

அதிகபட்சமாக ராஜஸ்தானில் ரூ. 778 கோடி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 605 கோடி மதிப்புள்ள மதுபானம், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. 3வது இடத்தில் தமிழகம் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட மொத்த பணம், பொருட்கள் மதிப்பு ரூ. 3475 கோடியாக இருந்தது. தற்போது முதற்கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன்பு, 4650 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
ஏப் 15, 2024 17:15

டாஸ்மாக்கினாடு எதிலும் முதல் என்றால் இது தான்


Mahendran Puru
ஏப் 15, 2024 17:03

தேர்தல் பாண்டு புகழ் பாஜக எவ்வளவு?பிரச்சாரம் செய்யும்எவ்வளவு?


Selvakumar Krishna
ஏப் 15, 2024 14:46

இவர்கள் வண்டவாளம் தெரிந்துவிட்டது


மேலும் செய்திகள்











புதிய வீடியோ