உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செல்லுார் ராஜு ரொம்ப நல்லவர்

செல்லுார் ராஜு ரொம்ப நல்லவர்

சென்னை:சட்டசபையில் நடந்த விவாதம்:சபாநாயகர் அப்பாவு: உங்கள் நேரம் முடிந்து விட்டது. பேச்சை முடியுங்கள்.அ.தி.மு.க., - செல்லுார் ராஜு: ஓரிரு நிமிடங்கள் பேச அனுமதிக்க வேண்டும்.அமைச்சர் துரைமுருகன்: ராஜா கதையை ஆரம்பிக்காமல், தொகுதி பிரச்னைகளை பேசுவார் என்றால், செல்லுார் ராஜுவுக்கு ஒரு நிமிடம் கொடுக்கலாம்.செல்லுார் ராஜு: மதுரைக்கு வேளாண் பல்கலை வரும் என்று எதிர்பார்த்தோம்; வரவில்லை. நாகை வேளாண் கல்லுாரி மாற்றப்பட்டுள்ளது. அதை மீண்டும் கொண்டு வர வேண்டும். மதுரைக்கு அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் எப்போது வரும்? எனக்கு பேச நேரம் வாங்கிக் கொடுத்த அமைச்சர் துரைமுருகனுக்கு நன்றி.துரைமுருகன்: செல்லுார் ராஜு மிகவும் நல்ல மனிதர். எனவே, உங்கள் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை