உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செம்மண் அள்ளிய வழக்கு: பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

செம்மண் அள்ளிய வழக்கு: பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் அமைச்சர் பொன்முடியின் ரூ 14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.கடந்த 2006-11-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில், விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை கிராமத்தில் அரசு செம்மண் குவாரியை, ஏலம் எடுத்து, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனை அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது ,இந்த வழக்கில் இன்று நடவடிக்கை எடுத்து பொன்முடி அவரது மகன் கவுதமசிகாமணி ஆகியோருக்கு சொந்தமான ரூ. 14.21 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

R. THIAGARAJAN
ஜூலை 27, 2024 16:36

ஜெயிலுக்கு போனாலும் மினிஸ்டர் சிறையில் வெளிய வந்தாலும் மினிஸ்டர் புண்ணியவான் மக்கள் பணத்தை தன மக்குள்ளும் சேயர்த்துவிட்டார்


G.Subramanian
ஜூலை 27, 2024 14:14

என்ன ஊழல் செய்தாலும் பெரும்பாலும் மந்திரிகள் , அரசியல்வாதிகள் கோர்ட்டால் தண்டிக்கப் படுவதில்லை ஒவ்வொரு கோர்ட்டில் முறையிட்டு தண்டணையிலிருந்து தப்புவது வழக்கமாகி விட்டது . இல்லாவிடில் ஒவ்வொரு கட்சியும் கறிச் சோறு விருந்து அமர்க்களமாக நடத்த முடியுமா?


ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 12:24

மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு நீதிபதி கடுமை காட்டிய நிமிடமே அள்ளும் உரிமையை நிலைநாட்ட முடிவு செய்திருப்பார்.


ரவிச்சந்திரன்
ஜூலை 27, 2024 12:10

இவனுங்க தண்டனை கொடுத்தே தப்பித்து விட்டான்.திமுகவில் திருட்டு கேஸ் இல்லாத தலைவனே கிடையாது இதுதான் அவனுங்க தகுதியே


V RAMASWAMY
ஜூலை 27, 2024 09:57

இதெல்லாம் ஒரு ஜுஜுபி.


karunamoorthi Karuna
ஜூலை 27, 2024 09:08

சிறையில் எப்போது அடைப்பார்கள் இவரை


v j antony
ஜூலை 26, 2024 23:20

பொருளாதார குற்றங்கள் நிரூபிக்க வெகுகாலம் பிடிப்பதால் ஊழல் அதிகரித்து வருகிறது சட்ட நடைமுறைகள் மாற்றி காலக்கெடு விதித்து நீதிமன்றங்கள் செயல்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்


rama adhavan
ஜூலை 26, 2024 23:07

ஓட்டை ஸ்கூட்டருக்கு இவ்வளவு சொத்தா? எப்படி வந்தது?


Sivak
ஜூலை 26, 2024 22:55

14 கோடி .. பிசாத்து பணம் அண்ணனுக்கு


Iniyan
ஜூலை 26, 2024 21:53

எங்கப்பா அந்த நீதி மான்கள்.


மேலும் செய்திகள்