உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னை சோதிக்காதீர்கள்...: செங்கோட்டையன் வேண்டுகோள்

என்னை சோதிக்காதீர்கள்...: செங்கோட்டையன் வேண்டுகோள்

கோபிச்செட்டிபாளையம்: '' அ.தி.மு.க., ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைத்தவன் நான். என்னைச் சோதிக்காதீர்கள்,'' என அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செயல்படுத்திய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், கோவை மாவட்டம், அன்னூர் அருகே பாராட்டு விழா நடந்தது. இதில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லாத காரணத்தினால், இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது பேசு பொருளாகியது. இச்சூழ்நிலையில், இன்று காலை அவர், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியானது. இதனை மறுத்த செங்கோட்டையன், ' அன்று பேசியது எல்லாம் அன்றோடு முடிந்தது. ஆள விடுங்க' எனக்கூறிவிட்டு சென்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ndxqxj7g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த எம்.ஜி.ஆர்., 108 வது பிறந்த நாள் விழாவில் செங்கோட்டையன் பேசியதாவது: என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. எத்தனை ஆண்டுகள் அரசியல் களத்தில் இருக்கிறேன், எத்தனை தலைவர்களை சந்தித்து விட்டு வந்திருக்கிறேன் என அனைவருக்கும் தெரியும். இங்கு வந்திருக்கும் நண்பர்களுக்கு, ஏதாவது கிடைக்குமா என தேடிக் கொண்டு இருக்கிறீர்கள். எதுவும் கிடைக்காது. எம்.ஜி.ஆர்., ஜெயலிதா படம் இல்லை என்று தான் அன்றைய தினம் என்னை அழைக்க வந்தவர்களிடம் தெரிவித்தேன். கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பத்திரிகையாளர்கள் பரபரப்பாக்கினர். நான் புறக்கணிக்கவில்லை. அவர்களின் படம் இல்லாத காரணத்தினால், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இன்று எத்தனையோ பேசிக் கொண்டு உள்ளனர். அது வேறு. அதை சொன்னால் வம்பாக போய்விடும். சர்ச்சையை ஏற்படுத்தி விடுவார்கள். எத்தனையே பேசுகிறார்கள். ஏதோ சொல்கிறார்கள். சொல்லிக் கொண்டு இருக்கட்டும். அதனைப் பற்றிக் கவலையில்லை.எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும் அதனைப் பற்றிக் கவலைப்படவில்லை. இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தவன் நான். என்னை சோதிக்காதீர்கள். அது தான் எனது வேண்டுகோள். நான் தெளிவாவும், தெளிந்த சிந்தனையோடும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுன் இருக்கிறேன். ஆனால், மாற்று முகாமில் இருந்து கருத்து சொல்கிறார்கள். அதனைப் பற்றிக் கவலையில்லை. இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அப்பாவி
பிப் 13, 2025 16:02

உள்குத்து சூடு பிடிக்கிது.


Haja Kuthubdeen
பிப் 12, 2025 22:00

அஇஅதிமுகவின் அற்புதமான தளபதி செங்கோட்டையன்.மிகவும் மதிப்புமிக்கவர்.சிண்டுமுடியும் வேலை நடக்காது.இபிஎஸ்ஸும் இவரும் நெருக்கமானவர்கள்.கட்சிக்கு இருவருமே உண்மை விசுவாசிகள்.


Perumal Pillai
பிப் 12, 2025 21:46

சங்கரன்கோயில் இடை தேர்தலில் பம்பரமாக சுழன்று சுழன்று வேலை பார்த்து ஜெயலலிதா விடம் பலமாக பரிசு வாங்கியவர் இந்த பழம் பெருசு.


Anantharaman Srinivasan
பிப் 12, 2025 22:56

பொம்பளை டீச்சர் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு ஜெயலலிதா கழட்டி விட்டதால் அமைச்சர் பதவியை இழந்தவரும் இவரே.


T.sthivinayagam
பிப் 12, 2025 21:28

நாரதர் சூஷ்மத்தில் சிக்கிய அதிமுக


Velan Iyengaar
பிப் 13, 2025 04:13

புத்தம்புதிய ஏக்நாத் ஷிண்டே வை உருவாக்கி சாதனை ..... இந்த உலகமகா தேர்தல் பத்திர மெகா ஊழல் பணக்காரக்கட்சியை நவீன அமாவாசை குறைத்து மதிப்பிட்டிருக்குது ....


Ramesh Sargam
பிப் 12, 2025 21:24

அப்படி என்ன பெரிய சோதனை உங்களுக்கு?


Rajan A
பிப் 12, 2025 21:55

பதவி இல்லாதது சோதனை தானே


Premanathan Sambandam
பிப் 12, 2025 21:18

2026 தேர்தலுக்கு அப்புறம் கட்சியே இருக்காது இப்போதே இவர்களை மக்கள் மறந்து விட்டார்கள்


Ramesh Sargam
பிப் 12, 2025 21:16

சோதனைமேல் சோதனை போதுமடா சாமி. தாங்காது சாமி.


sankaranarayanan
பிப் 12, 2025 21:09

செங்கோட்டையன் இல்லாமல் செங்கோட்டைக்குள் நுழையவே முடியாது என்பது உண்மை ...நடப்பும் அதுவே. தான் கட்சியின் மிக பழைய தொண்டன் ஜெயலலிதாவின் விசுவாசி இவரிடம் வாலாட்டவே வேண்டாம்.


தாமரை மலர்கிறது
பிப் 12, 2025 20:57

இவரு பெரிய இவரு...இவரை யாரும் சோதிக்கப்போவதில்லை.


Bye Pass
பிப் 12, 2025 20:53

ஜெயலலிதா வேனில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும்போது பம்பரம் போல சுழன்று பணியாற்றியவர் செங்கோட்டையன் …


முக்கிய வீடியோ