உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மன அமைதிக்காக ஹரித்வார் பயணம்; செங்கோட்டையன்

மன அமைதிக்காக ஹரித்வார் பயணம்; செங்கோட்டையன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: மன அமைதிக்காக ராமரை தரிசிக்க ஹரித்வார் செல்வதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் வலியுறுத்தினார். மேலும், இந்த கோரிக்கையை நிறைவேற்ற இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதையடுத்து, செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து இபிஎஸ் அதிரடி நடவடிக்கையை எடுத்தார். இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது; அதிமுக ஒன்றிணைய வேண்டும். ராமரை வழிபட ஹரித்வார் செல்கிறேன். நாளை எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை. நான் கலங்கி போய் விடக் கூடாது என்பதற்காக ஆதரவாளர்கள் என்னை சந்தித்து செல்கின்றனர். நீங்கள் சொன்னது நியாயமான கோரிக்கை தான் எனக் கூறினார்கள், இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Abdul Rahim
செப் 09, 2025 14:01

இவர் போனது அமித்ஷா வீட்டிற்கு


pakalavan
செப் 08, 2025 21:11

எடப்பாடிய தூக்கப்போறாங்க


Natchimuthu Chithiraisamy
செப் 08, 2025 16:45

தமிழக எதிர்க்கட்சி தலைவர் காங்கேயம் வருகை தருகிறார். 60 ஆண்டுகால அத்திக்கடவு திட்டத்தை ஆரம்பித்து அடிக்கல் நாட்டினார். அடுத்து வந்த ஆட்சியாளர் ஸ்டாலின் துவங்கி வைக்கவில்லை இருந்தாலும் 1800 கோடி மதிப்பிலான திட்டம் செயல்முறை நடவடிக்கை நடக்கிறது அந்த கொஞ்ச தண்ணீர் நிரப்பிய போதும் அந்த குன்னத்தூர் சுற்றியுள்ள அத்திக்கடவு திட்டமுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பொலிவு ஏற்பட்டு நல்ல விவசாயம் நடக்கிறது இன்னும் சில ஆண்டுகளில் பொள்ளாச்சி போல் தென்னை உற்பத்தி நடக்கும். இதற்கு எதை செய்தால் என்ன நடக்கும் என்று சரியாக கணிக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள். எங்கள் வறண்ட காங்கேயம் பூமிக்கு இது போல் நல்ல நீர் நிர்வாக திட்டத்தை கொடுங்கள். தங்கள் முதல்வராக இருக்கும் போது தங்களுக்கு ஒரத்துப்பாளையம் ஆணை பற்றி கடிதம் எழுதியிருந்தேன் அதையும் இணைத்துள்ளேன்.


Barakat Ali
செப் 08, 2025 14:20

அங்கே போனா சாமி ஞாபகம் வருமா?? அல்லது எடப்படியார் ஞாபகம் வருமா ????


V Venkatachalam
செப் 08, 2025 13:54

ஆசை யாரையும் விடாது. ஹரித்வார் போயிட்டு வந்தா மந்திரி பதவி நிச்சயம். எந்த கட்சியில் மந்திரி பதவி கிடைக்கும் ன்னு கேக்கப்புடாது. இந்த ஆளுக்கு தேச பக்தியும் கிடையாது. ஒரு மண்ணும் கிடையாது. நானும் இருக்கேன் கேஸ் தான்..


vee srikanth
செப் 08, 2025 12:38

கூவாதுர் கூட நல்ல இடம்


Haja Kuthubdeen
செப் 08, 2025 12:12

இவுரு யாரை கட்சியில் இனைக்கனும்னு சொல்றாரோ அந்த ஆளு எடப்பாடி தலைமையை ஏத்துக்க மாட்டாராம்...பின்னே எதுக்கு செங்கோட்டையன் மெனக்கெடுறார்????


எஸ் எஸ்
செப் 08, 2025 11:59

எடப்பாடியிடம் தனியாக அலுவலகத்தில் வைத்து பேச வேண்டியதை பொதுவெளியில் பேசி தவறு செய்து விட்டார். எடப்பாடியாவது கட்சி பொறுப்பைத்தான் பறித்தார். ஜெயாவாக இருந்தால் கட்சியை விட்டே தூக்கி இருப்பார்


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 08, 2025 11:49

ஸ்லீப்பர் செல் பத்திரமாக நல்ல மனநிலையில் இருக்க எஜமானர்கள் போட்ட உத்தரவாக இருக்கலாம்.


V RAMASWAMY
செப் 08, 2025 11:14

பயணம் முடிந்த பின் நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் பா ஜ க வில் சேர்ந்துவிடுங்கள், அதுவே சிறந்த வழி.


சமீபத்திய செய்தி