உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கோட்டையன் குரல் கலகக்குரல் இல்லை: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி

செங்கோட்டையன் குரல் கலகக்குரல் இல்லை: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''செங்கோட்டையன் குரல் கலகக்குரல் இல்லை. செங்கோட்டையன் மீது எந்த தவறும் கிடையாது'' என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.செங்கோட்டையன் பேட்டி கொடுத்து இருக்கிறார். அவரது குரல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சொல்கிறார் என்ற கேள்விக்கு தனியார் செய்தி சேனலுக்கு ஆட்டிட்டர் குருமூர்த்தி அளித்த பேட்டி: இதில் கலகம் என்ன இருக்குது. எனக்கு புரியவில்லை. எல்லோரும் ஒன்றாக வர வேண்டும் என்பதை எப்படி கலகக்குரல் என்று சொல்கிறீர்கள். அவர் இபிஎஸ்க்கு எதிராக எதும் கருத்து சொல்லி இருக்கிறாரா? இபிஎஸ் தலைவராக இருக்க கூடாது என்று சொல்லி இருக்கிறாரா? அனைவரும் இபிஎஸ் தலைமையில் ஒன்றிணைய வேண்டுமென சொல்வது அவருக்கு பெருமை தான். செங்கோட்டையன் மீது எந்த தவறும் கிடையாது. அவரது குரல் கலகக்குரல் அல்ல. இபிஎஸ்-ஐ ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட ஒன்றாக இணைந்து அவரை ஏற்றுக்கொண்டால் கட்சிக்கு நல்லது. உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை கட்சியில் சேர்த்து கொண்டு, நீங்கள் அவர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது கலகக்குரல். அவர் சொல்லியதில் எனக்கு ஏதும் தோன்றவில்லை. அனைவரும் ஒன்றிணைந்தால் கட்சிக்கு நல்லது என்பது இபிஎஸ்க்கு தெரியும். எல்லாரும் ஒன்றிணைந்தால் தனக்கு நல்லதா? என்று யோசிக்கிறார். இதுதான் எனக்கும், இபிஎஸ்க்கும் உள்ள கருத்து வேறுபாடு. இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Sun
செப் 06, 2025 10:55

வேறு நல்ல ஆட்கள் இவருக்கு எப்போதுமே கிடைக்க மாட்டார்களா?


Sesh
செப் 06, 2025 08:50

சந்தேகம் வேண்டாம் . இந்த மனிதரின் பங்களிப்பு இந்த கலக குரலில் நிச்சயம் உள்ளது. பன்னிர் மூலம் இவர் செய்த முயச்சி பயனளிக்கவில்லை இப்போது செங்கோட்டையனின் சேட்டை இவர்மூலம் . ஆனால் செங்கோட்டையன் பயன்தரமாட்டார் .நேர விரயம் மற்றும் பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தின் முயச்சிற்க்கு தடை.


renga rajan
செப் 06, 2025 05:30

அமித்ஷாவின் முயற்சி இது


M Ramachandran
செப் 06, 2025 00:38

இந்த பழனியோர் சரியான நயவஞ்சக நாடகத்தை நடத்தி இப்போர் பதவி ருசி கண்டு சாதி செயல்களில் ஈடு பாட்டு இஐக்கிறார். இதை அறிந்து தான் அண்ணாமலை பாஜக தனித்து நிற்க வேண்டும் என்று கூறி வந்தார்.இப்ப்போ பழைய கட்சியை நண்பர் நாயின்னருடன் சேர்ந்து தனக்கும் குழி ஆழமாகவெட்டி கொண்டிருக்கிறார். காரணம் ஸ்டாலின் கொடுத்த சாமிங்ஞை... கொடயநாடு கொலை கேசு. அண்ணாமலையின் வார்தையை மேலிடத்தில் ஏடு படாததால் சைய்லென்ட்டாக இருக்கிறார். அறுவடைய்ய செய்ய போவது பேராசை கொண்ட பழனியும் தமிழக மக்களைய புரிந்து கொள்ளாத மேலிடமும் தான். சந்தடி சாக்கில் விஜய்க்கு அட்றா சக்கை அட்றா சக்கை.


சிட்டுக்குருவி
செப் 05, 2025 21:43

பதவி எல்லோருக்கும் வேண்டுமென்றால் கட்சியின் தலைமை பதவிக்கு 5 வருடம் என்று கால நிர்ணயம் செய்யுங்கள் .ஒரு பொது எலெக்சன் வரை தான் தலைமை பதவிக்கு காலம் வையுங்கள் .சசிகலாவை உள்ளே கொண்டுவந்தால் கட்சிக்கு முடிவுக்காலம் வந்துவிட்டது என்பதை நன்கு அறியுங்கள் .


GUNA SEKARAN
செப் 05, 2025 20:52

திமுகவுடன் கள்ளக் கூட்டணி வைத்திருப்பது எட்டப்படி பழனிசாமிதான். அதனால்தான் யாரையும் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்.


T.sthivinayagam
செப் 05, 2025 19:44

முன்னாள் அதிமுக நிர்வாகி மற்றும் அமைச்சர் நாகேந்திர நைனார் இன்னும் பத்து நாளில் அதிமுகவை இணைத்து விடுவாரா என தொண்டர்களின் கேள்வி


GMM
செப் 05, 2025 19:38

சசியை கட்சியில் சேர்த்தால் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விரைவில் கைப்பற்றி விடுவர். இரும்பு பெண் ஜெயாவை 24 மணிநேரம் கட்டுபாட்டில் வைத்து இருந்தவர், எடப்பாடி, செங்கோட்டையன், அண்ணா மலை போன்றோரை ஒரு நொடியில் அடக்கி விடுவார். ஸ்டாலின் போன்ற மீடியா செல்வாக்குள்ள தலைவர்களையும் முடக்கி விடும் ஆற்றல் உண்டு. தமிழகம் இருண்ட காலத்தில் இருக்கும்.


Svs Yaadum oore
செப் 05, 2025 19:38

எடப்பாடி தலைமையில் உள்ள அ தி மு க வில் இனி சசிகலா குரூப் தினகரன் பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் போன்றவர்களுக்கு வாய்ப்பில்லை ....இதுதான் எடப்பாடி முடிவு ....முதல்வராக இருந்த காலத்திலிருந்தே அவர் இப்படித்தான் முடிவெடுக்கிறார் ....இதில் அவர் மாற இனி வாய்ப்பில்லை ....இதை ஏற்றுக்கொண்டவர் அ தி மு க வில் இருக்கலாம் ... குருமூர்த்தி போன்றோர் அட்வைஸ் சொல்லி கேட்கும் நிலைமையில் எடப்பாடி இல்லை என்பதும் நிதர்சனம் ....


திகழ்ஓவியன்
செப் 05, 2025 19:28

அண்ணாமலை,எடப்பாடியை புகழ்ந்தாரோ அன்றே தெரிந்து கொள்ள வேண்டாமா இந்த மாதிரி வில்லங்கம் எல்லாம் வரும் என்று


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை