உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தளர்வு; ஜாமின் கட்டுப்பாடுகளை நீக்கியது சுப்ரீம் கோர்ட்

செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தளர்வு; ஜாமின் கட்டுப்பாடுகளை நீக்கியது சுப்ரீம் கோர்ட்

தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'இதனால், வாரம் இருமுறை ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். இந்த பிரதான வழக்குகளின் அடிப்படையில், செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை தனியே வழக்குப் பதிவு செய்து கைது செய்தது; பின், நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், வாரம்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஈ.டி., அலுவலகம் முன் ஆஜராக வேண்டும் என்ற ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரியும், உத்தரவில் இடம்பெற்ற தனக்கு எதிரான கடுமையான கருத்துகளை நீக்கக் கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:

கடந்த ஒன்றரை ஆண்டு களாக வாரம்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியும், வழக்கில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என கூறுவதை ஏற்க முடியவில்லை. வாரம் இருமுறை அவரை அழைக்க என்ன காரணம். அவர் இருமுறை நேரில் வருகிறார். தேநீர் அருந்துகிறார். பின்னர் சென்று விடுகிறார். இது செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல; அவருக்காக வாரம்தோறும் இரு நாட்கள் காத்திருக்கும் ஈ.டி., அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே நாங்கள் கருதுகிறோம். வரும் வாரம் செந்தில் பாலாஜி இந்த வழக்குக்காக உங்கள் அலுவலகத்திற்கு வந்தால், அவரிடம் என்ன விசாரணை நடத்துவீர்கள் என சொல்லுங்கள்? இவ்வாறு கேள்வி எழுப்பினர். ஈ.டி., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோஹெப் ஹுசைன், ''செந்தில் பாலாஜி அதிகாரம் மிக்க நபர். அவர் சாட்சியங்களை கலைத்துவிட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்காகவே அவரது ஜாமினில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன,'' என்றார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் ராம் சங்கர் இருவரும், இந்த கூற்றை வலுவாக மறுத்தனர். 'செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் ஆஜராக சொன்னால், அவர் மறுப்பு தெரிவிக்காமல் ஆஜராவார். எனவே, இந்த நிபந்தனைக்கு தற்போது அவசியமே இல்லை' என வாதிட்டனர்.

பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றால் மட்டுமே, அவரை நேரில் அழைக்க வேண்டும். இதற்கான நோட்டீஸை ஈ.டி., முன்கூட்டியே அவருக்கு வழங்க வேண்டும். நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடலாம். அதே போல் செந்தில் பாலாஜி விசாரணைக்கு இடையூறாக இருந்தால், அமலாக்கத் துறையும் நீதிமன்றத்தை அணுகலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என கேட்ட மற்ற வழக்குகளை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

திகழ்ஓவியன்
டிச 10, 2025 13:00

இனி தேர்தலில் இவர் ஆட்டம் எதிரியாய் கதி கலங்க வைக்கும்


Venugopal S
டிச 09, 2025 20:03

அமலாக்கத்துறையின் வழக்குகள் எல்லாமே பொதுவாக இப்படித்தானே போய் முடியும்!


kalyanasundaram
டிச 09, 2025 17:13

Cheating public. Judge would have been asked to face dire consiquences or suitably rewarded .Hence present action


sasidharan
டிச 09, 2025 15:18

வாழ்க ஜனநாயகம் ,


D Natarajan
டிச 09, 2025 11:26

இந்த 10rs பாலாஜிக்கு ஆஜராகும் வக்கீல் கபில் சிபல் ஒழிந்தால் தான் இந்த வழக்கு முடிவுக்கு வரும். இந்த வழக்கு மட்டுமல்ல , மேலும் பல வழக்குகள் முடிவுக்கு வரும்.


Rengaraj
டிச 09, 2025 11:19

சட்டம் அந்த அளவுக்கு ஓட்டைகள் நிறைந்ததாக உள்ளது. வெவ்வேறு சட்டப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரே ஆளாக இருந்தாலும் அவர் மீதான அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றிட வேண்டும். ஒரு ஆள் மீது இரண்டு வழக்குகள் ஒரே நேரத்தில் இருக்கக்கூடாது. அப்படி இருப்பின் அவற்றை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடத்தில் வழக்குகள் இருப்பின் அவற்றை ஒரே நீதிமன்றத்தில் ஒரே வழக்காக மாற்றிட வேண்டும். அதிகார வரம்பில் குழப்பம் இருந்தால் உயர் அதிகாரம் கொண்ட நீதிமன்றத்துக்கு அந்த வழக்குகளை மாற்றிட வேண்டும். மக்கள் பிரதிநிதி ஒருவர் மக்கள் பணத்தை சுரண்டி ஊழல் செய்துஇருந்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடனே அவர் பதவியை இழக்கவேண்டும். குற்றம் இல்லாதவர் என்று அவர் நிரூபித்தபின்னர் அவர் பதவியில் அமரலாம். சட்டத்தின் பிரிவுகள் அனைத்தையும் இதெற்க்கேற்றவாறு மாற்றிடவேண்டும்.


Sudha
டிச 09, 2025 11:05

என்னிக்காவது ஒருநாள் இந்த கப்பல் மூழ்கி விடும் தானே


Sudha
டிச 09, 2025 11:03

புத்தாண்டு வாழ்த்துக்கள் செந்திலுக்கு, தமிழகத்திற்கு அரோஹரா


Arjun
டிச 09, 2025 10:28

இந்நாட்டிற்கு எதிராகவும் இந்த சமூகத்திற்கு ஏதிராகவும் செயல் படுவர்களுக்கு ஆதரவாக வாதடும் கபில்சிபல் போன்ற வழக்கறிஞர்கள் நாட்டின் சாபக்கேடு


c.mohanraj raj
டிச 09, 2025 08:55

விடுங்க சுப்ரீம் கோர்ட் அவரது வீட்டில் ஒரு பிரான்ச் போட்டால் கிடைக்கிறது