உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த செந்தூரன்: வெற்றிவேல், வீரவேல் கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்!

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த செந்தூரன்: வெற்றிவேல், வீரவேல் கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்!

தூத்துக்குடி: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்கான பக்தர்களின் கோஷம் விண்ணதிர, திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஆணவம் கொண்டு போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k1zk1h25&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 22ம் தேதி யாகசாலையுடன் தொடங்கியது. விழாவின் சிகர நாளான இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் பூஜை ஆரம்பமாகியது. மதியம் 12 மணி அளவில் யாகசாலையில் தீபாராதனையும் 12:45 மணிக்கு மேல் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் நடந்தது. பின்னர் மாலை 4:30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளினார். கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மனாய் அடுத்தடுத்து வலம் வந்து ஆணவத்துடன் போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் தன்னுடையே வேலால் சம்ஹாரம் செய்தார். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், 'வெற்றிவேல், வீரவேல் முருகனுக்கு அரோகரா' என கோஷமெழுப்பினர். சூரபத்மனை சுவாமி தன்னுடைய சேவற்கொடியாகவும், மாமரமாகவும் ஆட்கொண்டார். சம்ஹாரம் முடிந்ததும், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு, சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சூரசம்ஹாரத்தை ஒட்டி இந்த ஆண்டு மக்களின் பாதுகாப்புக்காக கிட்டத்தட்ட 4000 போலீசார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன, மேலும் 2 ட்ரோன் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. 20 மருத்துவர்கள் மற்றும் 50 செவிலியர்கள் மருத்துவ உதவிக்காக பணியாற்றினார்கள். அவசர சிகிச்சைக்காக 14 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

சூரசம்ஹாரம் ஏன்

கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள். சூரபத்மனுக்கு அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவனை நோக்கித் தவமிருந்தனர். தவப்பயனாக 1008 அண்டங்களையும் ஆட்சிசெய்யும் வரம் பெற்றனர். சூரியன், சந்திரன், அக்னிதேவன், குபேரன் முதலிய தேவர்கள் அசுரர்களின் பணியாளர்களாக மாறினர். தேவர்கள் பிரம்மாவிடம் சென்று தங்கள் நிலையைச் சொல்லி வருந்தினர். சூரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும். அதனால் அவரிடம் முறையிட்டால் விடுதலை கிடைக்கும், என்றார் பிரம்மா. தேவர்களும் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். அவருக்கு சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் உண்டு. அவற்றில் இருந்து ஆறு நெருப்புப் பொறிகளை உண்டாக்கினார் சிவன். அவை சரவணப்பொய்கையில் விழுந்து குழந்தைகளாக மாறின. அவற்றை ஒன்று சேர்த்த போது கந்தன் ஆனார். இவர் சூரபத்மனை வெற்றி கொண்டு தேவர்களைக் காத்தார். ஐப்பசி சஷ்டிதிதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததாக ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
அக் 28, 2025 14:48

ஆ ராசா சூரசம்சாரம் பார்த்தாரா?


Ramesh Sargam
அக் 27, 2025 23:07

முருகனுக்கு அரோஹரா. இந்த முருகர் அந்த சூரனை கொன்றதுபோல, நாட்டில் உள்ள ஹிந்து கோவில் சொத்துக்களை அபகரிக்கும் சூரர்களை, பாலியல் வன்கொடுமை செய்யும் அரக்கர்களை, மாற்றான் சொத்துக்களை திருடும் சூரர்களை மற்றும் அணைத்து ஊழல் செய்யும் சூரர்களையும், என்று கொள்வார்? முருகனுக்கு அரோஹரா.


ஆரூர் ரங்
அக் 27, 2025 20:03

இந்த தமிழ்க் கடவுள், தெலுங்குக் கடவுள் பிரஞ்சு கடவுள் etc உருவகமல்லாம் எப்போ ஓயும்? இறைவனுக்கு எல்லா மொழிகளும் தெரியும்..அவருக்கு அனைத்தும் சமம்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 27, 2025 19:42

திருச்செந்தூரானுக்கு ஜெயந்திநாதர் என்று பெயர் வைத்தாலும், சுத்தியிருக்கும் லட்சம் பேரும் போட்ட கோஷம் - “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” தான்.


N S
அக் 27, 2025 19:29

இரண்டு தகவல்கள். நேரலை நிகழ்ச்சியில் ஒரு அலைவரிசையில் வதம் முடிந்து நிறைவு செய்யும் பொழுது அறிவிப்பாளர் "தமிழக முதல்வர் வழிகாட்டுதல் படி" என்று உறைத்தார். திராவிட மாடல் நாட்களில் முருகனே நமது "அப்பாவின்" வழிகாட்டுதலால் வதம் செய்தார் எனலாம். இரண்டாவது, அமைச்சர் வேலுடன் நடந்து சென்று சம்ஹராம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Rathna
அக் 27, 2025 18:47

தமிழன் தெய்வம் முருக பெருமான். அகஸ்தியர்க்கு தமிழ் இலக்கணத்தை போதித்தவன். நக்கீரரின் தாகம் போக்க தன் வேலால் குன்றை குடைந்து நீர் வழங்கியவன். தமிழ் புலவர் ஒவையார்க்கு, வாழ்க்கையின் தத்துவத்தை போதித்தவன். மதுரையில் சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்தவன் அன்பு முருகன்.


திகழ் ஓவியன்
அக் 27, 2025 18:41

சூரசம்ஹாரத்துக்கு போறீங்க...சந்தோஷம்...ஆனால் தீம்காவை மொத்தமா வதம் செய்ய மாட்டேன்றீங்க...


ஜெய்ஹிந்த்புரம்
அக் 27, 2025 19:37

வதம் செய்வாங்க


திகழ்ஓவியன்
அக் 27, 2025 18:36

இவ்வளவு பேர் கூடி ஒரு அசம்பாவிதம் நடக்கவில்லை ஆனால் வேண்டும் என்றே நேரம் கடத்தி 8 மணிநேரம் காக்க வைத்த ஜோசப் ,41 பேர் பாலி வாங்கினார் , இந்த ஒரு லட்சம் பேர் கட்டுப்பாடு உள்ள கூட்டம் அனால் அது கட்டு பாடு அற்ற தற்குறி கூட்டம் விளைவு 41 பேர் உயிர் போச்சு


V Venkatachalam, Chennai-87
அக் 27, 2025 19:16

அஞ்சு கட்சி அமாவாசை செ பாவுக்கு எவ்வளவு முட்டி போட்டு முட்டு குடுத்தாலும் உண்மை வெளிவரும். அது வரை இது மாதிரி முட்டு குடுத்து ஓட்டலாம். நாளை என்பது யார் கையிலும் இல்லை. எவன் ஒருவன் எதை கையில் எடுக்குறானோ அதனால் அவனுக்கு அழிவு என்பதை யாரும் மறக்க கூடாது.


vivek
அக் 27, 2025 20:08

அது திமுகவின் திட்டமிட்ட செயல் தானே திகழ்...


Subramanian
அக் 27, 2025 18:04

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா


RAMESH KUMAR R V
அக் 27, 2025 17:59

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா


சமீபத்திய செய்தி