உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

கவர்னர் தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கவர்னர்கள் மலிவான தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கவர்னர்கள் மலிவான தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போது தான் காண்கிறது. அவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்கு சிறிதும் தகுதி இல்லாதவர்களாக உள்ளனர். திருவள்ளுவர் துவங்கி தெருவில் நடந்து செல்வோர் வரை எல்லோர் மீதும் காவிச்சாயம் பூசுகின்றனர். மத்திய அரசு செய்யும் மூர்க்கத்தன அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திமுக.,வுக்கு உண்டு. கவர்னர்களை வைத்து போட்டி அரசை நடத்த நினைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. பாஜ,வின் 10 ஆண்டுகால ஆட்சியில் மாநிலங்களின் உரிமை பறிபோயுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 74 )

P.Sekaran
ஜன 19, 2024 10:18

மடியில் கனம் இல்லையென்றால் உண்மையான கணக்கை காட்டிவிட்டு செல்ல வேண்டியதுதானே, முரசொலி இடத்திற்கு தடை மனு ஏன் போட்டீர்கள். பொன்முடிமீது ஒழுங்காக செயல்பட்ட தலைமை வழக்கறிஞரை கோபித்துகொண்டது எந்தவிதத்தில் ஞாயம் . மேலும் சிறையில் இருக்கும் உச்சநீதி மன்றம் குற்றவாளி என்று சொல்லியவர் புழல் சிறையிலுள்ள ஒருவருக்கு மாதந்தோரும் சம்பளம் கொடுப்பது எந்தவிதத்தில்ஞாயம் இதெல்லாம் மலிவான அரசியல் அல்லாவா? இவர் தமிழகத்தில் செய்யும் அரசியல் கீழ்தரமான அரசியல் இதில் நேர்மையான கவர்னரை குறைசொல்ல வந்துவிட்டார்


Ramesh Sargam
ஜன 19, 2024 00:42

காவி வண்ணத்தை கண்டால் உங்களுக்கு ஏன் இந்த பயம்? அதுவும் ஒரு வண்ணம் என்று ஒரு பெரியமனதுடன் எடுத்துச்செல்வதைவிட்டுவிட்டு, இப்படி அந்த வண்ணத்திலும் உங்கள் அரசியல் சாக்கடையை புகுற்றுகிறீர்கள். இது முதல்வருக்கு அழகா?


கணபதி
ஜன 18, 2024 23:16

தரம் தாழ்ந்த அரசியல் செய்வதுக்கு உதாரணம் திமுக மட்டுமே. அதை மிஞ்ச வேறு கழகம் இல்லை.


Jayaraman Pichumani
ஜன 18, 2024 23:07

திமுக மற்றும் அதன் ஓனர் ஸ்டாலினுக்கு என்ன தரம் உள்ளது? இந்தியாவில் உள்ள கட்சிகளில் மிகவும் கீழ்த்தரமான கட்சி ஒன்று உண்டென்றால், அது திமுக மட்டுமே.


J.V. Iyer
ஜன 18, 2024 21:25

யார் யாரை குறை சொல்வது என்ற விவஸ்தை இல்லை. திராவிஷ மாடலுக்கு இணையாக பதிலடி கொடுத்தால் அப்படித்தான் தெரியும். இந்த ஊழல்வாதிகள் திருந்தமாட்டார்கள்.


NicoleThomson
ஜன 18, 2024 20:41

முதலில் பல்லாவரம் MLA கருணாதியின் மகன் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறாய்?


Suppan
ஜன 18, 2024 20:30

தரம் கெட்ட திமுக தரத்தைப்பற்றி பேச கூச்சமாக இல்லையா விடியலாரே?


Sivagiri
ஜன 18, 2024 20:17

எல்லாம் சிரிங்கப்பா . . . ,


Sivagiri
ஜன 18, 2024 20:03

பழைய ஆயிரம்விளக்கு தொகுதியில் / சென்னை கடற்கரை முழுவதும் உள்ள குப்பங்களிலும் , வசிக்கும் பழைய ஆட்களிடம் விசாரித்தால் தெரியும் - - தரம் எப்படி என்று . ? . .


C.SRIRAM
ஜன 18, 2024 19:51

தர குறைவான அரசியல் செய்வது தி தி மு க கட்சி மற்றும் ஆட்சி மட்டுமே . எத்தனை புளுகினாலும் உண்மையை மறைக்க முடியாது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை