உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெட்கி தலைகுனியக் கூடிய செய்தி: வன்மையாக கண்டிக்கிறோம்

வெட்கி தலைகுனியக் கூடிய செய்தி: வன்மையாக கண்டிக்கிறோம்

நேற்று(ஆக.,31), 'தினமலர்' நாளிதழின் சேலம் மற்றும் ஈரோடு பதிப்பின் முதல் பக்கத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தரக்குறைவாக சித்தரித்து ஒரு செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.அந்த செய்தியையும் கீழ்த்தரமான சித்தரிப்பையும், தினமலர்- சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி, நெல்லை, நாகர்கோவில் பதிப்புகளின் நிர்வாகம் சார்பில் நான் கண்டிக்கிறேன்.அந்த செய்தி, தினமலர் நிறுவனர் காலஞ்சென்ற டி.வி.ராமசுப்பையர் ஏற்படுத்திக் கொடுத்துள்ள சமத்துவம், சமூக நீதி, தேசியவாதம் என்ற கோட்பாடுகளில் இருந்து முற்றிலும் விலகி நிற்கிறது.அதே நேரம், தினமலர் நாளிதழ் முன்னாள் ஆசிரியர் காலஞ்சென்ற இரா.கிருஷ்ணமூர்த்தி மதிய உணவு திட்டத்தை விரிவாக்க எடுத்த முயற்சிகளை கொச்சைப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.முதல்வரின் காலை உணவு திட்டம் அறிமுகமானபோது செய்திகள் வாயிலாக முழு ஆதரவு தெரிவித்தோம். அரசு பள்ளி மாணவர்களுக்கான அனைத்து நல திட்டங்களையும் தினமலர் வரவேற்கும்.தினமலர் சேலம் மற்றும் ஈரோடு பதிப்புகளை, கடந்த 23 ஆண்டுகளாக இரா.சத்தியமூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். அந்த பதிப்புகளுக்கு ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் அவரே இருக்கிறார். அவருக்கும், எங்களுக்கும் எந்த நிர்வாக/செய்தி தொடர்பும் இல்லை.இருப்பினும், 'தினமலர்' பெயரில் இப்படி ஒரு அருவருக்கத்தக்க, வெட்கி தலை குனியக்கூடிய செய்தி வெளியாகி இருப்பது, மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.

ஆசிரியர், தினமலர்

சென்னை, மதுரை, கோவை, புதுவை, நெல்லை, நாகர்கோவில் பதிப்புகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை