உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரவு நேரத்தில் அதிர்ச்சி!:சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதல்

இரவு நேரத்தில் அதிர்ச்சி!:சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதல்

சென்னை : கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீஹாரின் தர்பங்கா செல்லும் விரைவு ரயில், திருவள்ளூர் - கவரைப்பேட்டை மார்க்கத்தில், 'லுாப் லைனில்' நின்றிருந்த சரக்கு ரயில் மீது, நேற்றிரவு 8:27 மணியளவில் பயங்கரமாக மோதியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3d4pjghq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரவு நேரத்தில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தில், 13 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தன; 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்ததாக, முதல் கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. ஒடிசா மாநிலத்தில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்தை போலவே, இந்த சம்பவமும் இருப்பதால், பாதிப்புகள் அதிகம் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.மைசூரில் இருந்து, சென்னை வழியாக தர்பங்கா பகுதிக்கு, 3,047 கி.மீ., தொலைவு செல்லும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. பாக்மதி எக்ஸ்பிரஸ் எனப்படும் இந்த ரயில், நேற்று காலை, 10:34 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டது. மொத்தம் 27 பெட்டிகளில், 1,300க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர். இன்று மதியம் 2:25க்குள் தர்பங்கா செல்ல வேண்டிய ரயில் இது.இந்த ரயில், இரவு 7:37க்கு, சென்னை பெரம்பூர் வந்தடைந்தது. அங்கிருந்த பயணியரை ஏற்றிக் கொண்டு, வியாசர்பாடி ஜீவா வழியாக, கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, பயணத்தை தொடர்ந்தது.

'லுாப்'பில் நுழைந்த ரயில்

இரவு, 8:27 மணிக்கு பொன்னேரி வந்த அந்த ரயிலுக்கு, மெயின் லைனில் தொடர்ந்து செல்ல, 'சிக்னல்' தரப்பட்டது. அதன்படியே பயணித்த ரயில், கவரைப்பேட்டை அருகே வந்ததும், மெயின் லைனில் செல்லாமல், 'லுாப்' லைனுக்குள் திடீரென புகுந்து, மணிக்கு 75 கி.மீ., வேகத்தில் பயணித்தது.இந்த லுாப் லைனில், கடந்த இரண்டு நாட்களாக சரக்கு ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தேவைப்படும்போது இயக்கலாம் என்பதால், இன்ஜின் இல்லாமல், அந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது.அந்த நேரத்தில், லுாப் லைனுக்குள் வேகமாக வந்த விரைவு ரயில், சரக்கு ரயிலின் பின் பக்கம் பயங்கரமாக மோதியது. இதில், விரைவு ரயிலின் ஆறு பெட்டிகள் கவிழ்ந்தன; ஆறு பெட்டிகள் தண்டவாளத்தில் தடம்புரண்டன. மொத்தம் 13 பெட்டிகள் சேதமடைந்தன.

'டமார்' சத்தம்

விழுந்த வேகத்தில் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரியத் துவங்கின. சரக்கு ரயிலில் இருந்த பார்சல் பெட்டியும் பலத்த சேதம் அடைந்துள்ளது.இரு ரயில்கள் மோதியதால் எழுந்த சத்தத்தை கேட்டும், பெட்டிகள் விழுந்து தீப்பிடித்து எரிவதை கண்டும், அக்கம்பக்கம் வசிப்பவர்கள் ஓடிவந்தனர்.காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களும், அவசர ஊர்திகளும் அங்கு விரைந்தன. கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., அண்ணாதுரை தலைமையில், 70க்கும் அதிகமான போலீசார், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்களும் மீட்பு பணிகளுக்கு உதவினர். சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி விபத்து நடந்ததால், அந்த வழியாக சென்ற வாகனங்களில் சென்றவர்களும், மீட்புப் பணியில் உதவினர்.விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத வகையில், ரயில் தண்டவாளங்களின் அருகே சுவர் எழுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனால், மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டன.காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த ரயில் பயணிகளை துணை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.ரயில் விபத்தை தொடர்ந்து, அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அப்பகுதி முழுதும் இருளில் மூழ்கியது. இதனால், மீட்பு பணிகளை மேற்கொள்வது மீட்பு குழுவினருக்கு சவாலாக இருந்தது. தீயணைப்புத் துறை வசம் உள்ள பிரத்யேக மின் விளக்குகளை பயன்படுத்தி, மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரயில் விபத்தை தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால், புறநகர் ரயில் பயணியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.ரயிலில் பயணித்த மற்ற அனைவரும், வேறொரு ரயில் மூலம், சென்னை சென்ட்ரலுக்கு அழைத்து வரப்பட்டு, உணவு, இருப்பிடம் ஆகியவை அளிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து விசேஷ ரயில் மூலம், தர்பங்கா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணிகள் தீவிரம்

தேசிய பேரிடர் மீட்பு படையினர் 100பேர், ரயில்வே ஊழியர்கள் 250பேர் என மொத்தம் 350பேர் விபத்துக்குள்ளான ரயில் தடத்தை விரைவாக சீரமைத்து வருகின்றனர். இவ்விபத்து காரணமாக இன்று(அக்.,12) பொன்னேரி - கும்மிடிப்பூண்டி வழியாக செல்லும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உதவி எண்கள் அறிவிப்பு

ரயில் விபத்து தொடர்பாக பயணிகள் குறித்த தகவல்களுக்காக 04425354151, 04424354995 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் உத்தரவு

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி தலைமைச் செயலாளர் முருகானந்தம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், அமைச்சர் நாசர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

6 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

சென்னை - டெல்லி, ராமநாதபுரம் - செகந்திராபாத், காக்கிநாடா - தன்பத், திருச்சி - ஹவுரா எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

venugopal s
அக் 12, 2024 23:06

இந்தியாவை இதுவரை ஆட்சி செய்த அரசுகளில் இதைப் போன்ற ஒரு திறமையற்ற கையாலாகாத அரசை யாரும் பார்த்திருக்க முடியாது! இதில் வெட்டிப் பெருமை வேறு!


அபுதாபிரமேஷ்
அக் 12, 2024 21:50

இவ்ளோ நடந்திருக்கு. சிறிய விபத்தாம். இதைவெச்சு அரசியல் செய்யாதீங்கன்னு முருகர் பேசுறாரு.


அப்பாவி
அக் 12, 2024 18:31

ஒரு நாலு மின்னணுக்கள் தான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும். புடிச்சி விசாரிங்க.


சாண்டில்யன்
அக் 12, 2024 15:55

ஏம்பா அந்த ஸ்டேஷன் மாஸ்ட்டரை கேட்க மாட்டீங்களா? அத்தனை பயமா? நம்ம ஊடகங்கள் ஏன் இப்படி போயிடிச்சு? யாரோ கிராமத்து வழிப்போக்கர்தான் ரயில்வேயின் பப்ளிக் ரிலேஷன் அதிகாரியா? அவரை போய் பேட்டியெடுக்கிறீர்கள்


N Sasikumar Yadhav
அக் 12, 2024 13:22

பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதி ஒருவன் சொல்லியிருந்தானே ரயில்களை கவிழ்க்க சொல்லி அந்த கோணத்தில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்


R.PERUMALRAJA
அக் 12, 2024 12:26

ரயில்வே அமைச்சர் யார் என்று கூட இன்று வரை நாட்டு மக்களுக்கு தெரியவில்லை , அந்தளவுக்கு மோடி தனது பெயரை முன்னிலைப்படுத்தி கொள்கிறார் . கொடி அசைத்து புதிய train களை விடும் விழாவிற்கு வந்தால் மட்டும் போதாது வரும் தேர்தலில் இருக்கு , மகாராஷ்டிரா தேர்தல் இதற்க்கெல்லாம் பாடம் கற்பிக்கும் .


sridhar
அக் 12, 2024 12:48

பொது அறிவு கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் யார் பொறுப்பு. இந்த நாசவேலைக்கு யார் காரணம் என்றாவது தெரிந்து வைத்திருக்கிறீர்களா .


ayen
அக் 12, 2024 15:23

Railway அமைச்சர் பெயரை தெரிந்துக் கொள்ள பகுத்தறிவு இருந்தால் பொதும் இன்று நவின உலகில் googleலில் ஒரு பட்டனை தட்டினால் பொதும் அமைச்சர் பெயர், அவை செயல்படுத்தும் திட்டங்கள் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். தமிழ் நாட்டில் சத்துணவு திட்டத்தை துவங்கி வைக்க முதல்வர் துவக்கிவைத்தார் உடனே அதை திராவிட மாடல் என்பார்கள்.


சாண்டில்யன்
அக் 12, 2024 10:24

காலங்காலமாக தெற்கு ரயில்வேயில் - எல்லாம் மீட்டர் கேஜாக இருந்த காலத்திலேயே - ரயில்கள் போக்குவரத்தை பாதுகாப்பாக இயக்க ரயில் நிலையங்களில் எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் பேனல் உள்ளது. அதில் இதுபோன்ற குளறுபடிகள் இல்லை. இதனால் ஏற்படும் விபத்தும் சுத்தமாக நடந்ததில்லை. விபத்து என்றால் மனித தவறுகள்தான். அதாவது ஓட்டுனர்கள் சிவப்பு விளக்கை கவனிக்காமல் சென்றது, திடீர் பிரேக் மற்றும் தண்டவாளம் அல்லது பெட்டிகள் பழுது போன்றவைதான். சமீப காலமாக நடப்பவை எல்லாமே நிலையங்களில் உள்ள "கண்ட்ரோல் பேனல்களின் சிஸ்டம் பெய்லியர்தான்". பழையனவற்றை மேம்படுத்துவதாக சொல்லிக் கொண்டு செய்த கோளாறுகள்தான் லூப் லைனில் தண்டவாளத்தை திறந்து வைத்து மெய்ன் லைனுக்கு பச்சை சிக்னல் வராது வரக்கூடாது இப்போதுள்ளவைகளில் பச்சை விளக்கு தெரிகிறது என்பதுதான் கோளாறே. பொறுப்பில் உள்ளவர்கள் இந்த உண்மையை வெளியில் சொல்ல முடியவில்லை. ஏனெனில் இதை செய்தவர்களே அவர்கள்தானே. விபத்துக்கு ரயில் “பாதை மாறியதே காரணம்” அதிக வேகம் அல்ல. அப்படியிருக்க இதெல்லாம் தெரிந்த பாதுகாப்பு அதிகாரிகள் நேற்றும் இந்த கண்ட்ரோல் பேனலை குடையாமல் ஓட்டுநர் காபினில் போய் விமானங்களில் உள்ள ப்ளாக் பாக்ஸ் போன்ற பெட்டி எஞ்சினிலும் உண்டு. - சென்னை தயாரிப்புதான். அதை வைத்து என்ன வேகத்தில் வந்தது என்று குடைகிறார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 12, 2024 08:47

இதுதான் நிதர்சனம் ........ பாகுகாப்புப்பென்று Safety sur-ge வசூலிப்பது அயோக்கியத்தனம் ......


Dharmavaan
அக் 12, 2024 06:49

இது தேச விரோதிகள் ஜிகாதி தீவிரவாதிகலின் சதி வேலை என்பது திண்ணம் லூப் லைனில் மாற்றியிருக்கிறார்கள்


S. Authilingam
அக் 12, 2024 20:51

ஒரிசா ரயில் விபத்திலிருந்து பாடம் ஏதும் கற்க நேரமில்லையா?


Palanisamy Sekar
அக் 12, 2024 06:24

மெயின் லைனில் சிக்னல் கிடைத்தது தெரிந்தும் எதற்க்காக ரயில் ஓட்டுநர் லூப் லைனை தேர்ந்தெடுத்து அதில் செல்லவேண்டும்? இது சதித்திட்டமா என்கிற நோக்கில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். பலத்த காயம் அடைந்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதே. இப்படிப்பட்ட பொறுப்பற்ற ரயில் ஓட்டுனர்களை தேர்வு செய்யும் முன்னர் அவர்களது குடும்ப பின்னணியை ஆராய்வதுமட்டுமல்லாது தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். இல்லையென்றால் ரயில் பயணம் பாதுகாப்பற்றதாகிவிடும். பொறுப்பற்ற மனிதர்களால் குடும்ப பொறுப்புள்ள பலரின் குடும்பங்கள் மிகவும் கஷ்டப்படும்.


tech
அக் 12, 2024 12:46

Driver entha track poga vendum enbathei , driver panna mudiyathu. points man and station master control nal than mudiyum..bus steering wheela track change use panranga..?


முக்கிய வீடியோ