உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுவர்களா இவர்கள்; சாலையில் நடந்து சென்றவரை கொடூரமாக தாக்கிய வீடியோவால் அதிர்ச்சி!

சிறுவர்களா இவர்கள்; சாலையில் நடந்து சென்றவரை கொடூரமாக தாக்கிய வீடியோவால் அதிர்ச்சி!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்த சென்றவரை கொடூரமாக தாக்கி செல்போன் பறித்துச் சென்ற மூன்று சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி அருகே பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது நண்பரை சந்திக்க காஞ்சிபுரத்தை சேர்ந்த டேவிட் ராஜன் என்பவர் வந்துள்ளார். பின்னர் நள்ளிரவு 2 மணி அளவில் பூந்தோட்டத்தில் இருந்து பஸ் நிலையம் செல்வதற்காக பெங்களூர் சாலை வழியாக நடந்து சென்ற பொழுது அங்கு வந்த 13 வயது, 15 வயது, 16 வயதுடைய 3 சிறுவர்கள் திடீரென டேவிட் ராஜனை தாக்கியுள்ளனர்.இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த டேவிட் ராஜன் முகத்தின் மீது கற்களை போட்டு தாக்குதல் நடத்திவிட்டு செல்போனைப் பறித்து கொண்டு தப்பி ஓடினர். அங்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்து சாலையில் கிடந்த டேவிட் ராஜனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், டேவிட் ராஜன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், மூன்று சிறுவர்களையும் போலீசார் பிடித்து கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

D Natarajan
பிப் 22, 2025 08:25

எங்கும் கஞ்சா தான் காரணம் . ஆனால் நமக்கு ஹிந்தி எதிர்ப்பு தான் முக்கியம். கடவுளே தமிழ் நாட்டை காப்பாற்று


ram
பிப் 21, 2025 14:40

இதுக்கும் திருட்டு திமுக OOPIS முட்டு கொடுப்பானுக


ram
பிப் 21, 2025 14:39

கஞ்சா போதை மாத்திரை போதை மருந்து, இன்னும் ஐந்து வருடங்கள் திருட்டு திமுகவுக்கு வோட்டு போட்டிங்கிநா , இவனுக வீட்டுக்குள் வந்து பொருட்களை எடுத்து SELVAANGAL .


angbu ganesh
பிப் 21, 2025 11:35

...எப்படி இருக்கும் தமிழ் நாட்டு வளர்ப்பு. அப்பா ஸ்டாலின் சரியாய் வளர்க்கள


M Ramachandran
பிப் 20, 2025 20:14

விடியல் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா


Ranga
பிப் 20, 2025 12:57

வளர்ப்பு அப்படி