உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.100க்கும் குறைந்த பத்திரங்களுக்கு தட்டுப்பாடு

ரூ.100க்கும் குறைந்த பத்திரங்களுக்கு தட்டுப்பாடு

ராஜபாளையம்,:தமிழகத்தில் ரூ. 100க்கும் குறைவான பத்திரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.வங்கிகளில் கடன் பெறுதல் பல்வேறு உறுதிமொழி பத்திரம், வீடு, கடை வாடகை ஒப்பந்தம், தனி நபர் இடையே ஒப்பந்தம் சொத்து பரிவர்த்தனை, வங்கிகளில் கடன் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பத்திரம் அவசியம்.ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, முதல் ரூ.20 ஆயிரம் வரை பத்திரங்கள் உள்ளன.மாவட்ட கருவூலங்கள் மூலம் இவற்றை பத்திர விற்பனையாளர்கள் பெற்று விற்பனை செய்கின்றனர். மூன்று மாதங்களாக ரூ.100 க்கும் குறைந்த மதிப்பிலான பத்திரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.தனிநபர் ஒப்பந்தம், உறுதிமொழி பத்திரம் போன்றவற்றிற்கு ரூ.10, ரூ.20 மதிப்பிலான பத்திரங்கள் தேவை. அந்த பத்திரங்கள் கிடைக்காததால் ரூ.100 பத்திரங்களை பயன்படுத்த வேண்டி உள்ளது.பத்திர எழுத்தர்கள் கூறியது: செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தி அரசுக்கு வருவாயை அதிகரிக்க முயற்சிப்பதாக சந்தேகம் உள்ளது. மக்களுக்கு வீண் செலவு ஏற்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !