உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோரிக்கைகளுக்காக போராடிய நர்ஸ்களை கைது செய்வதா? இபிஎஸ் கண்டனம்

கோரிக்கைகளுக்காக போராடிய நர்ஸ்களை கைது செய்வதா? இபிஎஸ் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மீண்டும் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி கைது செய்யப்பட்ட நர்ஸ்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: திமுக அரசு, 2021ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலின்போது நர்ஸ்களுக்கு அளித்த வாக்குறுதி எண் 356ஐ நிறைவேற்றக்கோரியும், கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு, திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட அனைத்து நர்ஸ்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று தமிழக நர்ஸ்கள் மேம்பாடு சங்கத்தின் சார்பாக அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சிவானாந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான நர்ஸ்கள் கலந்து கொண்டனர்.நேற்று இரவு 7.30 மணிக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட நர்ஸ்களை கைது செய்து அவர்களை பஸ்கள் மூலமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டனர். இறக்கிவிடப்பட்ட நர்ஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலேயே தங்களது கோரிக்கைகள் நிறைவேறாமல் கலையமாட்டோம் எனக் கூறி, திமுக அரசுக்கு எதிரான கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, திமுக அரசின் காவல்துறை அவர்களை மீண்டும் கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கடந்த நான்கரை ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நர்ஸ்களை உடனடியாக விடுவிப்பதுடன், 2021ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

shyamnats
டிச 20, 2025 08:25

முந்தைய அதிமுக ஆட்சியில் ஆரம்பித்த பிரச்சினைகளை தீர்ப்பதாக சொல்லித்தானே வாக்கு சேகரித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்தீர்கள். சொல்லியதை செய்யவில்லை, சொல்லாததை மட்டுமே செய்கிறீர்கள் - மக்கள் உரிமை குரல் நிறுத்துவது. - அண்ணாமலை , யூட்டுயுபர் கைது போன்றவை.


Vasan
டிச 19, 2025 16:42

திமுக இந்த பிரச்சினையை 2021 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்தார்கள் என்றால் என்ன அர்த்தம்? இந்த பிரச்சினை, 2021க்கு முன்னால், முந்தைய அதிமுக ஆட்சியில் ஆரம்பித்த பிரச்சினை, 2021 தேர்தல் நேரத்தில் நிலவிய பிரச்சினை.


sankar
டிச 19, 2025 17:40

ஆமாம் சார் மிஸ்டர் இருநூறு - கொடுத்த வாக்குறுதி என்னாச்சு என்பதுதான் கேள்வி?


Vasan
டிச 19, 2025 16:38

எடப்பாடியாரே, என்ன சொல்கிறீர்கள்? போராடாத நர்ஸ்களை கைது செய்ய சொல்கிறீர்களா ?


SIVAKUMAR
டிச 19, 2025 14:00

தங்கள் ஆட்சியில் என்ன நடந்தது என்று உலகத்திற்கே தெரியுமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை