உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாலிபர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற எஸ்ஐ: வீடியோ பரவியதால் சிக்கல்!

வாலிபர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற எஸ்ஐ: வீடியோ பரவியதால் சிக்கல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனில் மோட்டார் சைக்கிளுடன் தமது காரில் மோதிய வாலிபரை, காரில் ஏற்றி இழுத்துச் சென்ற போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ. காந்திராஜனின், 59, வீடியோ வைரலானது. பின்னர் காந்திராஜனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்திரவிட்டார்.தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்தவர் காந்தி ராஜன் (வயது 59). இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=urlnbljn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் நேற்றிரவு பணி முடிந்து திருநெல்வேலி டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே முன்னால் சென்ற பஸ் ஒன்று திடீர் என நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பஸ்ஸின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து சாலையில் கிடந்த தனது மோட்டார் சைக்கிளை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி விட்டு காரை வழிமறித்து நின்று வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம்

உடனே காரில் இருந்து இறங்கிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபர் மீது காரை ஏற்றியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். 1/2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்து சென்றுள்ளது. இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வைரலாக பரவிய அந்த வீடியோ சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பேசு பொருளாக மாறியது.

சஸ்பெண்ட்

தற்போது சிறப்பு எஸ்.ஐ. காந்திராஜன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அவரிடம் துறை ரீதியான விசாரணை நடந்தது. அவர் மது போதையில் வந்து ஒழுங்கினமான செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. பின்னர், காந்திராஜனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்திரவிட்டார். காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Padmasridharan
செப் 19, 2025 07:04

காக்கி உடையின் அரசு வேலையை இழிவுபடுத்தும் வேலைகளைத்தான் பல காவலர்களும் அதிகாரத்துடன் மக்களிடையே செய்கின்றனர். ரோந்தில் வரும் காவலர்கள் குடித்துதான் வலம் வருகின்றனர். கார் ஓட்டும் பலரும் செய்யும் தவறுதான் இவரும் செய்துள்ளார் சாமி. கார் ஓட்டுபவருக்கு முன்னாள் இருப்பவர் மட்டுமே தெரியும், ஆனால் முன்னாள் இருப்பவருக்கோ அவருக்கு முன்னாள் இருப்பவர்கள் தெரியும், வழியில் படுத்திருக்கும் நாய்கள் உட்பட. ஆனால் கார் ஓட்டுபவர்கள் ஹார்னை அடித்துக்கொண்டே வழிவிட எதிர்பார்க்கிறார்களே தவிர பிரேக்ஸை அழுத்தி செல்ல எத்தனிப்பதில்லை. சிறு ரோடுகளிலும் இவ்வாறே நடந்து கொள்கின்றனர். Horn free zone என்று பலகையை வைக்கலாம் அரசு


oviya vijay
செப் 18, 2025 21:53

ஓய்வு பெறும் நேரத்தில் எந்த ஒரு வழக்கும் பதிவக்கூடாது. இப்படிக்கு உச்ச நீதிமன்றம். இது எப்படி இருக்கு?


சிட்டுக்குருவி
செப் 18, 2025 18:35

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது குற்றம் என்று அறிந்த காவல்துறையின் அதிகாரியே அதை செய்தால் அவர் சட்டத்திற்கு அளிக்கும் மதிப்புதான் என்ன ? கடுமையான அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்.


rama adhavan
செப் 18, 2025 18:22

இது போன்ற பொறுக்கிகளை மக்கள் மிதி மிதி என்று மிதித்து உடல் பாகங்களை கழட்ட வேண்டும். அந்த துணிச்சல் மக்களுக்கு வந்தால் தான் நாடு விளங்கும். தவறாக நடக்கும் அரசியல் வியாதிகளுக்கும் இதையே செய்ய வேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 18, 2025 16:09

நீதிமன்றத்துக்கு சென்றால், காந்திராஜன் காரில் சொல்வதை தவிர்த்திருக்கலாம் ,மது அருந்துவதை குறைத்திருக்கலாம் என்று நிச்சயமாக தண்டனை வழங்குவார்


c.mohanraj raj
செப் 18, 2025 16:07

காட்டுமிராண்டிகளை போலீசாகுவதற்கு அனுமதிக்க கூடாது


V Venkatachalam
செப் 18, 2025 15:56

போலீசுக்கும் போது மக்களுக்கும் வித்தியாசம் இல்லாம போச்சு. போலீசுக்கும் ரௌடித்தனம் பண்ணிக்கொண்டு திரியிற பசங்களுக்கும் வித்தியாசம் இல்லாம போச்சு. இந்த போலீஸ் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா திருட்டு தீமுக பாணியில் அவனை புடிச்சி உள்ளேயே போட்டிருந்திருக்கலாம். கம்ப்ளெயிண்ட் குடுத்தவன படிச்சி உள்ள போடுவதுதான் சமீபத்திய போலீஸ் நடவடிக்கைகள். பாவம் அவரு பொறுமை இழந்துட்டாரு. ரிடயர் ஆகிற சமயத்துல பொறுமை ரொம்ப ரொம்ப அவசியம்.


vee srikanth
செப் 18, 2025 15:13

மது போதையில் இருந்தார் - அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வில்லையா ?


AaaAaaEee
செப் 18, 2025 14:37

வாலிபர்? பாத்தா அப்படி தெரியலியே


vijay
செப் 19, 2025 10:47

கரெக்ட். நானும் போட்டவில் இருப்பவரை பார்த்து யோசித்தேன். அவருக்கு எப்படியும் 40 - 50 வயசு இருக்கும்


Raja k
செப் 18, 2025 13:52

சஸ்பென்ட் ஒரு தண்டனையா? டிஸ்மிஸ் செய்ய வேண்டும், அந்த ஆளுக்கு மாவுகட்டு போட்டு இருக்கனும்,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை