உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க மோடியிடம் சித்தராமையா கோரிக்கை

மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க மோடியிடம் சித்தராமையா கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி, பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.பிரதமர் நரேந்திர மோடியை, டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று கர்நாடக காங்., அரசின் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் சந்தித்து பேசினர்.அப்போது பிரதமர் மோடியிடம், 'கர்நாடகா போன்ற மாநிலத்தில் நீர்ப்பாசன திறனை பலப்படுத்துவது அவசியம். பெரும்பாலான மாநிலங்கள், தங்களிடம் உள்ள நீர் வளத்தை பயன்படுத்தி, நீர்ப்பாசன வசதியை செய்து கொள்கின்றன. ஆனால் மத்திய ஜல் சக்தி அமைச்சகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை எங்களின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க தாமதம் காட்டுகின்றன.'குறிப்பாக, மேகதாது திட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. இத்திட்டத்துக்கு விரைவில் அனுமதி அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல் மஹதாயி, பத்ரா மேலணை போன்ற நீர்ப்பாசன திட்டங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்' என, சித்தராமையா வலியுறுத்தினார்.உரிய நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் மோடி உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
நவ 30, 2024 07:21

கட்டாந்தரை கோட்பாடுகள் கேவலமானது என்பதால் அணை கட்டினால் கூட ஓக்கே தான். அணை கட்டி அதன் கட்டுப்பாடு தமிழகத்திடம் இருந்தால் பரவாயில்லை. திராவிடர்களுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து மொத்த தண்ணீரையும் ஒரு சொட்டு கூட கொடுக்காமல் அபேஸ் செய்து விட வாய்ப்பு கூட உண்டு. பிகு: வேஷ்டி கட்டி ஷூ போடும் நாகரீகம் புதுமையானது.


Raj
நவ 30, 2024 07:14

இவர் மேகதாது விஷயத்திற்கு போயிருக்கமாட்டார், இவர் மேலே உள்ள குற்றங்களை பற்றி கூறி தப்ப முயற்சி......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை