உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆறு நகரங்களில் வெயில் சதம்

 ஆறு நகரங்களில் வெயில் சதம்

சென்னை;தமிழகத்தில் மாலை நிலவரப்படி, ஆறு நகரங்களில் வெயில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவானது. தமிழகத்தில் பல்வேறு நகரங்களில், வெப்பத்தின் தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, வேலுார், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா, 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. ஈரோடு, மதுரை, திருப்பத்துார், திருச்சி நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை