உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்லாஸ் தேர்வு பிப்., 4ல் துவக்கம்

ஸ்லாஸ் தேர்வு பிப்., 4ல் துவக்கம்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கான கற்றல் திறனறி தேர்வான, 'ஸ்லாஸ்' தேர்வு, பிப்., 4, 5, 6ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடும் வகையில் நடத்தப்படும் ஸ்லாஸ் தேர்வுகள், அடுத்த மாதம், 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளன.அதாவது, கொள்குறி வினா முறையில், மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, 35 வினாக்கள், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 45 வினாக்கள், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில், இந்த தேர்வுகள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !