உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகை மதிப்பீட்டாளர்களை கொத்தடிமையாக நடத்துவதா: சீமான் கேள்வி

நகை மதிப்பீட்டாளர்களை கொத்தடிமையாக நடத்துவதா: சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களை கொத்தடிமைகளாக நடத்துவதா' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

அவரது அறிக்கை:

பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் ஏதுமின்றி கொத்தடிமைகள் போல நடத்தப்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது. வங்கிகளில் நூறு விழுக்காடு அளவிற்கு நகைக்கடன்கள் லாபத்தை தருவதுடன், முழுமையாகத் திரும்பப் பெறப்படும் கடன்களாகவும் உள்ளன. அந்த அளவிற்கு வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்கள் வங்கிகளின் வளர்ச்சிக்கும், லாபத்திற்கும் முக்கிய பங்காற்றுகின்றனர். ஆனால், நகை மதிப்பீட்டாளர்கள் பணியானது இதுவரை வரையறுக்கப்பட்ட பணியாக இல்லை என்பது பெருங்கொடுமையாகும்.

நகைகள் அடமானம்

வங்கிகளில் நகைக்கடன் பெறும் பொதுமக்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தரகு தொகையை மட்டுமே நகை மதிப்பீட்டாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறதே தவிர அவர்களுக்கென்று தனியாக ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. அதன் காரணமாக வங்கியில் நகைகள் அடமானம் வைக்கப்படாத நாட்களில் அவர்களுக்கு எவ்வித ஊதியமும் கிடைப்பதில்லை. நிரந்தர பணியாக இல்லாத காரணத்தினால் வங்கி மேலாளர்களின் விருப்பப்படி செயல்பட கட்டாயப்படுத்தப்படுவதோடு, அப்படி செயல்படாத நிலையில் அவர்களின் கோபத்திற்கும், அதன் காரணமாகப் பணி இழக்கும் சூழலுக்கும் தள்ளப்படுகிதின்றனர்.

மருத்துவக் காப்பீடு

தற்காலிக பணியாளர் என்பதால் சுதந்திரமாகப் பணியாற்றி மக்களுக்கு சேவையாற்ற முடிவதில்லை என்பதால், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று நகை மதிப்பீட்டாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். மேலும், நகை மதிப்பீட்டாளர்களை தகுதித்தேர்வு மூலம் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், தொழிலாளர் வைப்புநிதி, மருத்துவக் காப்பீடு ஆகியவை வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மிக மிக நியாயமானதே.

பணி நிரந்தரம்

பா.ஜ., அரசு பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். தமிழகத்தை ஆளும் திமுக அரசு கூட்டணி பலத்தோடு பார்லிமென்டில் தமக்குள்ள 40 எம்.பி.,க்கள் பலத்தின் மூலம் மத்திய அரசிடம் வலியுறுத்தி நகை மதிப்பீட்டாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தந்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Parthasarathy Badrinarayanan
நவ 15, 2024 08:38

40 டம்மி உறுப்பினர்களால் ஏதும் பயனில்லை.


venugopal s
நவ 15, 2024 06:08

எல்லாவற்றுக்கும் மேலாக வங்கிகளில் நகைக்கடன்கள் சம்பந்தப்பட்ட முறைகேடுகள் எல்லாவற்றிலும் இந்த நகை மதிப்பீட்டாளர்கள் காரணமாக இருப்பது நகைக் கடன் திட்டத்துக்கே மிகப்பெரிய சவாலாக உள்ளது. விரைவில் வங்கிகள் தங்கநகை தர மதிப்பீடு செய்ய இவர்கள் உதவியின்றி நவீன டெக்னாலஜி மூலம் மெஷின்கள் பயன்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.


Natarajan Ramanathan
நவ 14, 2024 18:54

I retired as a senior manager from a nationalized bank after 36 years of service including rural service in Andhra Pradesh. during my rural service, most of the months, our jewel appraiser was getting more amount as commission than me. in fact as he was getting more money, he was very happy and will give us party every month.


MADHAVAN
நவ 14, 2024 17:27

சீமான் போன்ற ஆமைக்கறி அரைவேக்காடுகள், எதற்கெடுத்தாலும் போராட்டம் பண்ணுவானுங்க, நகை மதிப்பீட்டாளர் நன்றாக பணம் சம்பாரிக்கின்றார்கள், 3 அல்லது 4 வங்கிகளுக்கு ஒரு மதிப்பீட்டாளர் மதிப்பீடு செய்கின்றநர், நல்ல வருமானம்தான், உன்னை போன்ற அறிவிலிகளுக்கு ஆமைக்கறிதான்


mindum vasantham
நவ 14, 2024 17:53

திமுகவை விட்டாயா


MARI KUMAR
நவ 14, 2024 15:38

தங்க நகையை மதிப்பீடும் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லையா, குழம்பில் கருவேப்பிலையை போட்டு தாளிப்பார்கள், ஆனால் நாம் சாப்பிடும் போது கருவேப்பிலையை கடுகையும் தூர எடுத்து வைத்து விடுவோம், அதுபோல உள்ளது


haris jayaraj
நவ 14, 2024 15:21

என்னது அவர்கள் கொத்தடிமைகளா? அவர்களுக்கு எவ்வளவு வருமானம் வருதுன்னு தெரியுமா?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 14, 2024 15:11

இதை நகை மதிப்பீட்டாளர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இப்போது நகை மதிப்பீட்டாளர்கள் ஒரு நகை கடனுக்கு 50 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை மதிப்பிடப்பட்டு தரகு நகை கடன் வாங்குபவர்களிடம் வாங்குகிறார்கள். இதன் சராசரி 200 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு ஒரு வங்கியில் புதிய நகை கடன் மற்றும் நகை வருடத்திற்கு ஒருமுறை மாற்றி வைப்பது போன்றவைகளால் குறைந்தது இருபது வணிகமாவது நடக்கும். இருபது வணிகங்களுக்கு இருநூறு ரூபாய் என்று போட்டால் நகை மதிப்பீட்டாளரின் வருமானம் ஒரு நாளைக்கு நான்கு ஆயிரம் ரூபாய். அதாவது அந்த வங்கி உதவி மேலாளர் ஊதியம் அளவுக்கு பெறுவார்கள். முறைப்படுத்தி ஊதியம் கொடுத்தால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக அனுபவம் அதிகம் உள்ளவர்களுக்கு 60000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் அதாவது 2000 ரூபாய் என்ற அளவில் கிடைக்கும். 2000 பெரியதா அல்லது 4000 பெரியாதா அதுவும் குறைந்த அனுபவத்தில்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை