உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சோ ராமசாமி மனைவி காலமானார்

சோ ராமசாமி மனைவி காலமானார்

சென்னை:'துக்ளக்' இதழின் நிறுவனர் சோ ராமசாமியின் மனைவி சவுந்தரா 84, சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு மகன் ஸ்ரீராம், மகள் சிந்துஜா உள்ளனர். சவுந்தராவின் இறுதிச் சடங்குகள் சென்னையில் இன்று நடக்கும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: சோ ராமசாமியின் மனைவி சவுந்தரா மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். மறைந்த சோ ராமசாமி தன் வாழ்நாளில் பத்திரிகை உலகிலும், சினிமா, பொதுவாழ்விலும் தனி முத்திரை பதிக்க உற்ற துணையாக இருந்தவர் சவுந்தரா.இவ்வாறு கூறியுள்ளார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், சசிகலா உள்ளிட்டோரும், சவுந்தரா ராமசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி