உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சில வரலாற்று தவறுகளை சரி செய்யணும்: திருப்பரங்குன்றம் விஷயத்தில் கிருஷ்ணசாமி கருத்து

 சில வரலாற்று தவறுகளை சரி செய்யணும்: திருப்பரங்குன்றம் விஷயத்தில் கிருஷ்ணசாமி கருத்து

மதுரை: “சில வரலாற்று தவறுகளை, ஏதாவது ஒரு நேரத்தில் சரி செய்ய வேண்டும்,” என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். மதுரையில் அவர் அளித்த பேட்டி: வழிபாட்டு விஷயங்களில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஒருமுறை பழனி சென்றபோது, 'தமிழகத்தில் கடவுள் என்றால் முருகனாக இருக்கலாம்' என கூறினார். அந்த வகையில், தமிழ் மண்ணோடும், உணர்வோடும் தொடர்புடையவர் முருக கடவுள். எனவே, திருப்பரங்குன்றம் மலை மீது, தீபத்துாணில் தீபம் ஏற்றுவதில் தமிழக அரசு, இவ்வளவு கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. தனிப்பட்ட முறையில் தீபம் ஏற்ற முயன்றால், தடுக்க போலீசாருக்கு உரிமையுண்டு. ஆனால், நீதிமன்ற உத்தரவுடன் சென்றவர்களை தடுத்துள்ளனர். அரசின் நிலைப்பாட்டால் போலீசாருக்கும், நீதிபதிக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் தரம் தாழ்ந்து விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. சில வரலாற்று தவறுகளை, ஏதாவது ஒரு நேரத்தில் சரி செய்ய வேண்டும். தீபத் துாணில் தீபம் ஏற்றுவதால், முஸ்லிம்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. திருப்பரங்குன்றம் விஷயத்தை, மதத்திற்கு அப்பாற்பட்டு தமிழ் உணர்வோடு, இயற்கை வழிபாட்டு முறையாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kannan
டிச 07, 2025 14:44

Haa நீதிபதிகள் எல்லோரும் யோக்கியமாக நியாயப்படி சரியானவர்களா. கையும் களவுமாக பிடிப்பட்டவர்கள் பலபேரு. Gods அல்ல. Sign பண்ணத்தான் salary சலுகைகள்


Karthikeyan
டிச 08, 2025 15:02

முதலில் நீ யோக்யனா? இல்ல... இந்த திமுக ஆட்சியாளர்கள்தான் யோக்யசீலன்களா? இனியாவது மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்...


Sivavadivel
டிச 07, 2025 13:30

His approach thinking is always unbiased in the interest of Nation He is always away from cheap politics In my view he is the only politician at present right choice to lead our state


NAGARAJAN
டிச 07, 2025 12:01

உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா. .


Appandairajan p
டிச 07, 2025 11:05

டம்ளக் அரசு மதசார்பின்மை என்ற போர்வையில் முஸ்லிம்ஸ் துணையுடன், காவல் துறையை சட்டத்துக்கு புரம்பான, ஹிந்துக்களின் விரோதமாக ஆட்சி செய்வதை கண்டிக்கிறோம் இனி தன் டம்ளக் எப்போதும் ஆட்சிக்கு வராது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை