உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி என்ற சுமையை இன்னும் சிலர் இறக்கி வைக்கவில்லை: ஐகோர்ட் கவலை

ஜாதி என்ற சுமையை இன்னும் சிலர் இறக்கி வைக்கவில்லை: ஐகோர்ட் கவலை

சென்னை: 'அரசியல் சாசனம் வகுத்து, 75 ஆண்டுகள் கடந்தும், ஜாதி என்ற தேவையில்லாத சுமையை, சமூகத்தில் உள்ள ஒரு சில பிரிவினர் இன்னும் கீழே இறக்கவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா ஆவலப்பட்டி கிராமத்தில், வரதராஜபெருமாள் மற்றும் சென்றாய பெருமாள் கோவில்கள் உள்ளன.

உத்தரவு

இக்கோவில்களில், குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக திட்டம் வகுக்கக்கோரி, ராஜேந்திரன் என்பவர், 2015 டிச., 22ல் விண்ணப்பம் செய்தார்.இந்த விண்ணப்பத்தை உரிய காலத்துக்குள் பரிசீலித்து, ஹிந்து அறநிலைய துறையின் கோவை இணை ஆணையர் உத்தரவு பிறப்பிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அறநிலைய துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கோவிலுக்கு ஒரு திட்டத்தை வகுக்க கோரிய விண்ணப்பம் நிலுவையில் இருந்தால், அத்தகைய திட்டத்தை வகுக்க, இந்த நீதிமன்றம் உத்தரவிடும். ஆனால், இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கை என்பது, ஜாதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. ஜாதி ஒரு சமூக தீங்கு; ஜாதியற்ற சமூகம் என்பது தான் நம் அரசியல் சாசனத்தின் இலக்கு. ஜாதியை நீடித்து, நிரந்தமாக்க செய்யும் வகையிலான வழக்கு தொடுத்த மனுதாரரின் கோரிக்கை, அரசியல் சாசனம் மற்றும் பொது கொள்கைக்கு விரோதமானது.எனவே, மனுதாரரின் கோரிக்கை மனுவை, ஹிந்து அறநிலைய துறையின் கோவை மாவட்ட இணை ஆணையர் தள்ளு படி செய்ய வேண்டும். ஜாதியை நிலை நிறுத்துவதற்கான எதையும், எந்த நீதிமன்றமும், ஒருபோதும் பரிசீலிக்க முடியாது.இதற்கான காரணம் மிகவும் எளிது. ஜாதி என்பது, ஒருவர் வாழ்க்கையில் என்ன கற்றுக் கொள்கிறார் அல்லது செய்கிறார் என்பதை பொறுத்து, அது தீர்மானிக்கப்படுவதில்லை; அது, பிறப்பால் ஏற்படுகிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற, சமூகத்தின் அடிப்படை நெறிமுறை களுக்கு எதிராக உள்ளது.ஜாதி, நாட்டை பல காலமாக பிளவுபடுத்தி வருகிறது. சமூகத்தை பிளவு படுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை துாண்டும் ஜாதி, வளர்ச்சிக்கு எதிரானது. ஜாதி அடிப்படையில் எந்த பாரபட்சமும் இருக்கக்கூடாது. ஜாதியில்லா சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே, அரசி யல் சாசனத்தை உருவாக்கிய தலைவர்களின் கனவாக இருந்துள்ளது.

75 ஆண்டுகள்

அரசியல் சாசனம் வகுத்து, 75 ஆண்டுகள் கடந்த நிலையில், ஜாதி என்ற தேவையில்லாத சுமையை, சமூகத்தில் உள்ள ஒரு சில பிரிவினர் இன்னும் கீழே இறக்கி வைக்காமல் உள்ளனர். இதனால், அரசியலமைப்பு சட்டத்தின் செயல்பாடுகளே விரக்தியடைந்து உள்ளன. ஜாதி அமைப்பு, சமூகத்தின் குறிக்கோள்கள் மற்றும் மதிப்புகளை, சிதைக்க வழிவகுக்கிறது.ஜாதியை நிலைநிறுத்தும் எந்தவொரு கோரிக்கையும், அரசியலமைப்புக்கு விரோதமானது மட்டுமல்ல, பொது கொள்கைக்கும் எதிரானது என்பதை, உறுதியாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.அறங்காவலர் பதவிக்கு, பக்தி, நம்பிக்கையுடன், ஆன்மிக, அறச்சிந்தனை தான் அவசியம். இவற்றை அடிப்படையாக கொண்டு தான் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும்; ஜாதி அடிப்படையில் அல்ல.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

sankar
பிப் 18, 2025 07:58

அய்யா பெருசு.. பள்ளிக்கூடத்துல மொதல்ல கேட்பதே சாதிதான்.. அத கவனிங்க


NATARAJAN R
பிப் 16, 2025 22:03

ஆகா ஏதோ இந்த ஒரு நபர் மட்டுமே ஜாதியை பிடித்து தொங்குவதாக நினைத்து நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எங்கு தமிழ் நாட்டில் ஜாதி இல்லை? பள்ளியில் குழந்தை சேரும் போது ஜாதி சான்றிதழ். பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் ஜாதி சான்றிதழ். சலுகை பெற ஜாதி சான்றிதழ். கல்லூரியில் சேர இட ஒதுக்கீடுகள் பெற ஜாதி சான்றிதழ். பணியில் சேர இட ஒதுக்கீடுகள் ஜாதி சான்றிதழ். பதவி உயர்வு பெற ஜாதி சான்றிதழ். திருமணம் செய்ய அந்தந்த ஜாதிக்கு வரன்கள். தனி திருமண தகவல் மையம். தேர்தலில் நிற்க ஜாதி சான்றிதழ். வேட்பாளர் தேர்வு அந்த தொகுதியில் அதிகம் வசிக்கும் ஜாதியை சேர்ந்தவர்களுக்கு. அமைச்சர்கள், அவரவர் ஜாதி கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்பு. தமிழ் நாட்டில் ஜாதிவாரியாக கட்சிகள். அதற்கு தேர்தலில் அனுமதி. இப்படி எங்கும் ஜாதி மயமான தமிழ் நாட்டில் ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட ஆலயத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதிகாரரை நிர்வாகம் செய்ய நியமனம் செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தாராம். நீதிமன்றம் ஜாதியை ஏற்காது என்று தள்ளுபடி செய்து விட்டதாம். இன்னும் தமிழ் நாட்டில் ஊராட்சி தலைவராக ஜாதி காரணமாக பதவி ஏற்க முடியாத நிலை உள்ளது என்று நீதிமன்றம் அறியாதோ?


Karthik
பிப் 16, 2025 18:11

தனிப்பட்ட முறையில் அவரவர் தன் சொந்த ஜாதியை பின்பற்றுவதிலோ/ அடையாளமாக கொண்டிருப்பதிலோ தவரே இல்லை. ஏனெனில் அது அவரது அடையாளம், தனியுரிமை. தனிநபர் உரிமையில் தலையிடுவதை விடுத்து.. முதலில் நீதிமன்றங்களில் ஜாதியை ஒழிக்க உத்தரவிடுங்கள். பின்னர், ஜாதிவாரி கணக்கெடுப்பை தடை செய்யுங்கள். கட்டாயம், ஜாதி மத அரசியல் கட்சியை தடை செய்யுங்கள் அடுத்து, பள்ளி சேர்க்கையில் ஜாதி சான்றிதழ் கேட்கக் கூடாதென உத்தரவிடுங்கள். எக்காரணம் கொண்டும் , அரசு பணியில் ஜாதிக் கோட்டா அடிப்படையில் நியமனம் கூடாது என உத்தரவிடுங்கள். முடிந்தால் ஹிந்து மத வழிபாட்டு தலங்களில் மூக்கை நுழைப்பதை நீதிமன்றமும், அரசும், அறநிலையத்துறையும் நிறுத்தவும். அது முடியாதெனில், பிற மதங்களின் வழிபாட்டு தலங்கள் மீதும் அறநிலையத்துறைக்கு அதிகாரம் கொடுத்து உத்தரவிடங்கள். அப்போது தெரியும் ஜாதி மதம் எங்கு எப்படியெல்லாம் உள்ளதென்று


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 16, 2025 08:04

பொருளாதார அடிப்படை மட்டுமே ஜாதியை ஒழிக்கும். பொருளாதார அடிப்படை மட்டுமே பிரிவினை வாத சக்திகளை அழிக்கும். பொருளாதார அடிப்படை மட்டுமே மக்களை ஒன்றிணைக்கும். பொருளாதார அடிப்படை மட்டுமே திருட்டு அரசியல் செய்வோரை வேறறுக்கும். பொருளாதார அடிப்படை மட்டுமே வரி ஏய்ப்பை ஒழிக்கும். பொருளாதார அடிப்படை மட்டுமே சமூகத்தில் உயர்வாக காட்டி கொள்ள துணை புரியும். பொருளாதார அடிப்படை மட்டுமே கல்வியை ஊக்குவிக்கும். பொருளாதார அடிப்படை மட்டுமே சம தர்ம சமுதாயத்தை தரும். பொருளாதார அடிப்படை மட்டுமே ஊழலுக்கு எதிராக போராடும். பொருளாதார அடிப்படை மட்டுமே ஆக்க பூர்வமாக மக்களை சிந்திக்க வைக்கும். பொருளாதார அடிப்படை மதங்களுக்கு இடையேயான வேறுபாடு களையும். பொருளாதார அடிப்படை மட்டுமே ஒழுக்கத்தை உருவாக்கும்.


jayvee
பிப் 16, 2025 07:56

குறைந்தபட்சம் நீதிமன்ற வேலை வாய்ப்புகளில் தகுதி அடிப்படையில் 50% மேலும் 50% பொருளாதார அடிப்படையில் வேலை வாய்ப்பை வழங்க உரம் உள்ளதா ? இதை செய்வதன் மூலம் ஜாதி முறையில் கட் ஆப் வைத்து அதிலும் அதிக மதிப்பெண் பெரும் நபரை ஜெனரல் கோட்டாவில் மோதவைக்கப்படும் ஜாதி வெறியை ஒழிக்கலாம்


Amar Akbar Antony
பிப் 16, 2025 07:13

என்று என்னுடைய வேலைக்காக கல்வி மற்றும் அந்த வேலைக்கு சார்ந்த தகுதிக்கு தகுதியிருந்தும் என் விண்ணப்பம் நான் பிறந்த சாதியை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டதோ இந்த தமிழக அரசால் அன்று வள்ளல் எம் ஜி ஆர் முதல்வர் அன்றிலிருந்து அரசு சுட்டிக்காட்டிய அந்த சாதியை என் பெயரில் அணைத்து வழிகளிலும் இணைத்திருக்கிறேன் பொருளாதாரத்தில் தாழ்ந்திருந்த சமயம் அது அந்த வள்ளல் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் - அன்று - என்னை போல் இருந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்த திட்டத்தை எதிர்த்த எதிர் கட்சிகள் கம்மிகள் தீ மு க உட்பட இன்றுவரை நான் வாக்களிப்பதில்லை. அ இ அ தி மு க விற்கே இன்றளவும் வாக்களித்துக்கொண்டிருக்கிறேன் தற்போது குஜராத்தில் எம் ஜி ஆர் ன் திட்டம் அமல்படுத்தப்படுகிறது ஆதலால் பாராளுமன்றத்திற்கு பா ஜ கவிற்கே


nagendhiran
பிப் 16, 2025 06:34

இடஒதீக்கிடு இருக்கும் வரை ஜாதிகள் அழிய வாய்ப்பில்லை யுவர்ஆனர்?


Iniyan
பிப் 16, 2025 05:14

ராமசாமி நாயக்கர் தான் ஜாதிய ஒழிதுவிட்டாரே ஜாதி பெயரால் முன்னுக்கு வந்த நீதி மான் அவர்களே


Palanisamy T
பிப் 16, 2025 04:07

இன்றைக்கும் தமிழகத்தில் யாரும் தன் சாதியை இறக்கிவைக்க தயாராகயில்லை . சாதி பறையன் என்ற இந்த இரண்டும் நல்ல தமிழ் சொற்கள். உலக அகராதியில் தவறான விளக்கத்தில் மாசு அடைந்த நிலையில் இன்று அச்சேற்ப்பட்ட சொற்கள் . இதன் விளைவால் ஏற்ப்பட்டதுதான் தீண்டாமை. நாளை இந்தியமக்களுக்கு இது நல்லதல்ல. அவ்வளவு சுலபத்தில் இறக்கிவைக்கவும் முடியாது. இந்திய மக்கள் தாங்களாகவே முன்வந்து மாறவேண்டும். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்", நாம் இறைவன்முன் அனைவரும் சமமென்ற உணர்வு மேலோங்க வேண்டும் . இதுதான் நமக்கு என்றைக்கும் நல்லது.


S.Murugesan
பிப் 16, 2025 02:49

பின் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க அரசியல்வாதிகள் கூறுவதை நீதி மன்றம் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கிறது. கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருவதை கண்டிக்கவில்லை. எந்த சமூக மக்களும் முன்னேற முயற்சிக்க ஆவண செய்ய வேண்டுமே தவிர ஒதுக்கீடு கூடாது.


Palanisamy T
பிப் 16, 2025 09:58

நாம் எதுவும் விளங்காமல் பேசக் கூடாது. நாட்டை ஆள்வது நீதிமன்றமில்லை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை