சவுக்கு சங்கர் தெலுங்கானாவில் சிறைபிடிப்பு
சென்னை: தெலுங்கானா போலீசார் தன்னை நீண்ட நேரம் சிறைபிடித்து வைத்து இருந்ததாக யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கும்பமேளா நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்காக காரில் பிரயாக்ராஜ் சென்றேன். வழியில், தெலுங்கானா மாநிலம் ராமையாபேட்டையில் ஒரு கடையில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்த போது, எனது வாகனத்தை தெலுங்கானா போலீசார் எங்களை போலீஸ் ஸ்டேசன் அழைத்துச் சென்றனர். காரணம் கேட்ட போது, எங்களை சோதனை செய்யும்படி சென்னை போலீசார் கூறியதாக தெரிவித்தனர். அவர்கள் அனுப்பிய புகைப்படத்தையும் போலீசார் அவர்கள் காட்டினர். எங்களை ராமையாப்பேட்டை போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்றனர். அங்கு, எங்களது வாகனத்தை அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய உத்தரவு வந்துள்ளதாக தெரிவித்தனர். இரண்டு மணி நேரம் கழித்து காற்று மாசு சான்றிதழ் இல்லை எனக்கூறி அபராதம் விதித்து அனுப்பினர். அடுத்து வந்து சோதனை சாவடிகளிலும் நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டேன் எனக்கூறியுள்ளார்.இது தொடர்பான புகாரை, தமிழக அரசுக்கும், தெலுங்கானா அரசுக்கும் அவர் அனுப்பியுள்ளார்.