உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரு வாரத்திற்குள் பாம்பனில் புதிய ரயில் பாலம் திறப்பு விழா தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் தகவல்

இரு வாரத்திற்குள் பாம்பனில் புதிய ரயில் பாலம் திறப்பு விழா தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்,: இரு வாரத்திற்குள் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நடக்கும். விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்தார்.பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் நின்றபடி புதிய ரயில் பாலத்தை நேற்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் பார்வையிட்டார். இதன் பின் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சி இடம் மற்றும் ராமேஸ்வரத்தில் நடக்கும்ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணியை பார்வையிட்டு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா மற்றும் பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.முன்னதாக கவுசல் கிஷோர் கூறியதாவது: இரு வாரத்திற்குள் பாம்பன் பாலம் திறப்பு விழா நடக்கும். விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளது. பாம்பன் பழைய பாலத்தை பராமரிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sankaranarayanan
மார் 23, 2025 13:00

ராமேஸ்வரம் தனி பாராளுமன்ற தொகுதியாக அறிவிக்கும்வரை இப்பாலத்தை திறக்க விடமாட்டோம் என்று திராவிட மாடல் அரசு தீர்மானம் போட்டிருக்காமே


V.Mohan
மார் 23, 2025 12:17

எவ்வளவு பேர் வயற்றெரிச்சல் கமெண்ட் அடிப்பதற்கு என்று விடியல் அரசிடம் சம்பளம் வாங்குறாங்கப்பா? நல்ல காசு பாக்கும் பொழப்புப்பா


பாமரன்
மார் 23, 2025 10:10

ஸ்ஸ்ஸ்யப்பா வெயில் அதிகம்....


MUTHU
மார் 23, 2025 08:48

ஆண்டாண்டு காலமாய் இந்தியர்களை பிடித்த அழுக்கு எண்ணம் இது. ஒருத்தன் நல்ல உடை அணிந்தாலே பொறுக்காது. கேலி செய்வது. விவசாயின்னா அழுக்கு உடையில் இருக்கணும். கூலித்தொழிலாளி கிழிந்த பனியனுடன் இருக்கணும். லோடுமன் சட்டையில்லாமல் இருக்கணும். என்னய்யா எண்ணம் இது.


panneer selvam
மார் 23, 2025 10:55

It is called brand value . Poor means they will live in slums and Old people will not wear shirt , children were with uncombed hair , looks dirty .


Natarajan Ramanathan
மார் 23, 2025 08:18

இந்த பாலத்தை சென்ற ஆண்டே திறக்க ஏற்பாடு நடந்தது. குறுக்கே பூந்து அதை கெடுத்தது மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் உருப்படாத வெங்கடேசன். அவர்தான் கொள்ளை அடிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் பத்து லட்சம் லஞ்சம் வாங்கி கொண்டு இதை தடை செய்தார் என்று கேள்வி.


venugopal s
மார் 23, 2025 08:01

ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்க வேண்டும் போல் உள்ளதே!


अप्पावी
மார் 23, 2025 07:53

இவுரு சொல்லி என்ப பிரயோஜனம்? இலங்கை வரும்போது ஜீ தலை காட்டினால் உண்டு. உலகப்.பிரச்சனைகளை தீர்க்கவே நேரமில்லை.


கிஜன்
மார் 23, 2025 06:55

ரெண்டு வாரத்துல திறக்கலேன்னா .... யு வில் பி டிரான்ஸபார்ட் டு மணிப்பூர் .... கட்டி முடிச்சு ஒரு வருஷம் ஆகப்போகுது .... வெள்ளையும் சொள்ளையுமா வந்து இன்ஸ்பெக்ஷனாம் ...


Appa V
மார் 23, 2025 07:34

பேனா நட்டுட்டாங்களா மெரினாவில்


SK
மார் 23, 2025 07:44

அறிவு ஜீவி கமன்ட் போட வந்தாச்சு


Ray
மார் 23, 2025 08:58

மெரினாவில் பேனா வைக்கக் கூடாதுன்னு கேஸ் போட்டானுங்களே கேஸ முடிச்சானுங்களா? என்னாச்சு?