உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளா மற்றும் அதையொட்டிய தமிழக பகுதிகளில் இன்று(மே 30) துவங்கியது.தென்மாவட்டங்களில் கோடை வெயில் குறைந்து, தென்மேற்கு பருவமழைக்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், வடமாவட்டங்களில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Chandrakumar K
மே 30, 2024 15:52

இடப பாதி வைகாசி பின்பாதிஎன்று கருத்து செறிவுடன் மலையாள மொழியில் அழைக்கப்படும் தென் மேற்கு பருவமழை தாமதமின்றி வழக்கமான நாளில் கேரளத்தில் துவங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. பாரதம் முழுதும் சீராக பரவி செழிப்பூட்ட வேண்டும். விண்ணை முட்டும் விலைவாசியை கட்டுப்படுத்த தன்னாலான பங்களிப்பபை இயற்கை அன்னையாவது செய்யட்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை