மேலும் செய்திகள்
பிளஸ் 1 தேர்வு: 7036 பேர் பங்கேற்பு
06-Mar-2025
சென்னை:'பாலிடெக்னிக் பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படும்' என, அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.அவரது அறிவிப்பு:பாலிடெக்னிக் கல்லுாரி பயின்று, பல்வேறு குடும்ப சூழலில் தேர்ச்சி பெறாமல் நிலுவை வைத்துள்ள பாடங்களுக்கு, தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கும்படி, மாணவர்களிடமிருந்து கோரிக்கை வந்தது. அதன்படி, இறுதியாண்டு முடித்தும், சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், வாழ்வில் முன்னேற்றம் பெற ஏதுவாக, ஏப்ரல் மற்றும் அக்டோபர் பருவத் தேர்வுகளின் போது, நிலுவை பாடங்களில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து விபரங்களை, https://dte.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
06-Mar-2025