உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சிறப்பு பயிற்றுனர்கள் 8வது நாளாக போராட்டம்

 சிறப்பு பயிற்றுனர்கள் 8வது நாளாக போராட்டம்

சென்னை:பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 8வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பு பயிற்றுனர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர். ஊதிய உயர்வுடன் கூடிய நிரந்தர பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் சார்பில், கடந்த 21ம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 8வது நாளான நேற்று, டி.பி.ஐ., வளாகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற, 100க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்றுனர்களை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ