உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு சோதனை

ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு சோதனை

சென்னை : மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில், பட்டாக்கத்தி, சொத்து ஆவணங்கள், 'லேப்டாப், ஹார்டு டிஸ்க்' உள்ளிட்டவற்றை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கைப்பற்றினர்.சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், டிசம்பர், 23ம் தேதி மாணவி ஒருவர், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில், கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன், 37 என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, புக்யா சினேஹப்ரியா, ஐய்மன் ஜமால், பிருந்தா ஆகிய மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு, இவ்வழக்கை விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலம் அடிப்படையில், இந்த வழக்கில், இரண்டாம் குற்றவாளி இருக்கலாம் என, சிறப்பு புலனாய்வு குழு சந்தேகித்துள்ளது. அதன்படி, வழக்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளது.இதைதொடர்ந்து, கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரனின் வீட்டில், நேற்று காலை முதல் சிறப்பு புலனாய்வு குழு சோதனையில் ஈடுபட்டது. மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுடன், 15க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்.இதில் பகல், 12:00 மணியளவில் இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கிளம்பி சென்ற நிலையில், புக்யா சினேஹப்ரியா தலைமையில் தொடர்ந்து சோதனை நடத்தது. மாலை வரை நீடித்த சோதனையில், லேப்டாப், ஹார்ட் டிஸ்க், சொத்து ஆவணங்கள், பட்டாக்கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.பின், ஞானசேகரன் மனைவியிடம் விசாரணை நடத்தி, எழுத்து வடிவில் வாக்குமூலம் பெற்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்த ஆவணத்திலும் கையெழுத்து வாங்கினர். மாலை, 5:00 மணி வரை நடந்த சோதனையை முடித்து, பறிமுதல் செய்த ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.சிறப்பு புலனாய்வு குழு அதிகாரி புக்யா சினேஹப்ரியாவிடம், 'யார் அந்த சார் என்ற விபரம் கிடைத்ததா' என, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ''சிறிது காலம் அவகாசம் கொடுங்கள்,'' என்று பதிலளித்தார்.தற்போது கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்த பின், வழக்கில் மற்ற யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கலாம் என்பது குறித்து விசாரிக்க, ஞானசேகரனை காவலில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிறுவனால் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு வீட்டில் ஞானசேகரன் குடும்பம் வசிக்கிறது. அந்த வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்த போது, மாலை, 3:30 மணியளவில், அருகில் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த சிறுவன், குடியிருப்பின் நுழைவு வாயிலை பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டான்.அந்த சிறுவனை தேடியும் கிடைக்காததால், பூட்டை உடைத்து அதிகாரிகள் வெளியே வந்தனர்.

'யூக செய்திகள் விசாரணையை பாதிக்கும்'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Constitutional Goons
ஜன 05, 2025 15:36

சோதனை என்ற பெயரில் வீட்டில் உள்ளவற்றையெல்லாம் எடுத்து செல்வது சட்டத்திற்கு புறம்பானது . கத்திக்கும் இன்ற வழக்குக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?


sankaranarayanan
ஜன 05, 2025 14:00

சம்பவம் நடந்து பத்து நாட்களை கடந்து இப்போதுதான் ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாஉதயன் வு குழு சோதனையா என்னையா இது எங்கே போய் சொல்வது பத்து நாட்களில் அவனுடைய வீட்டில் இருந்த எல்லா தடையன்களம் அழிக்கப்பட்டபின் புலனாய்வு செய்து என்ன பயன் இதை மக்களின் காதில் பூ சூடாமல் செய்யாமலே இருந்திருக்கலாம் சிபியையிடம் கொடுத்திருந்தால் எப்போது உண்மை வெளிவந்திருக்கும் சார் சார் என்பவரின் முழுவிவரமும் மக்களுக்கு தெரிந்திருக்கும் இனி என்ன இது பூட்ட கேஸுதான்


புதிய வீடியோ