உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

மதுரை : சனி, ஞாயிறுகளில் மதுரை வழியாக இயக்கப்படும் விழுப்புரம் - ராமேஸ்வரம் - விழுப்புரம் சிறப்பு ரயில்களின் (06109/06110) சேவை, ஜூலை 27 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதிகாலை 4:15க்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06109), திருச்சி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக காலை 11:40க்கு ராமேஸ்வரம் செல்லும். மறுமார்க்கம், மதியம் 2:35க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06110), இரவு 10:35க்கு விழுப்புரம் செல்லும். இவற்றுக்கான முன்பதிவு துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை