-நமது நிருபர்-சபரிமலை அய்யப்ப பக்தர்களின் வசதிக்கு, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நரசபூர் - கொல்லம் ரயில், இன்று, டிச., 27 மதியம், 1:00 மணிக்கு புறப்பட்டு, விஜயவாடா, ரேணிகுண்டா, திருப்பதி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே மறுநாள் இரவு, 10:00 மணிக்கு கொல்லத்தை அடையும். காலை, 8:30க்கு சேலம், 9:35க்கு ஈரோடு வந்து செல்லும். மறுமார்க்க ரயில், வரும், 29 அதிகாலை, 2:30க்கு கிளம்பி, அடுத்த நாள் மதியம், 12:30க்கு நரசபூரை அடையும். மதியம், 1:15க்கு ஈரோடு, 2:22க்கு சேலம் வந்து செல்லும். அது போல சார்லபள்ளி - கொல்லம் சிறப்பு ரயில், ஜன., 10 மற்றும் 17 காலை, 10:30க்கு புறப்பட்டு செகந்திராபாத், மந்திராலயம் சாலை, தர்மாவரம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே மறுநாள் இரவு, 10:00 மணிக்கு கொல்லத்தை அடையும். காலை, 8:30க்கு சேலம், 9:35க்கு ஈரோடு வந்து செல்லும். மறுமார்க்க ரயில், ஜன., 12 மற்றும் 19 அதிகாலை, 2:30க்கு கிளம்பி அடுத்தநாள் மதியம், 1:20க்கு சார்லபள்ளியை அடையும். மதியம், 1:15க்கு ஈரோடு, 2:22க்கு சேலம் வந்து செல்லும். சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.