உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேச்சு, பேட்டி, அறிக்கை: என்.எல்.சி., 3வது சுரங்க திட்டத்தை கைவிட பா.ம.க., வலியுறுத்துமா

பேச்சு, பேட்டி, அறிக்கை: என்.எல்.சி., 3வது சுரங்க திட்டத்தை கைவிட பா.ம.க., வலியுறுத்துமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு:கடலுார் தொகுதியில் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., சார்பில் தங்கர் பச்சான் போட்டியிடுகின்றனர். நெய்வேலியில் 3வது சுரங்கம் அமைக்கக் கூடாது என, மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் பா.ஜ., கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். என்.எல்.சி., 3வது சுரங்கம் திட்டத்தை கைவிட வேண்டும் என, தேர்தல் அறிக்கையில் அவர்கள் வெளியிடுவரா? பா.ஜ., கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. ஆதாய கூட்டணி.பா.ம.க., கூட்டணிக்காக தைலாபுரம் தோட்டத்துக்கு நடையாய் நடந்தவராச்சே... கடைசியில், அல்வா கொடுத்து அவங்க பா.ஜ., பக்கம் போயிட்டா, கடுப்பாக மாட்டாரா என்ன?தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என, முதல்வர் கூறியள்ளார். முதலில் உங்ககிட்ட இருந்து தமிழகத்தை காப்பாத்தணும். உங்கள் குடும்பத்திடம் இருந்தும் தான். சட்டம் -- ஒழுங்கு சீர்குலைவு, குடும்ப ஆட்சி போன்றவற்றுக்கு இந்த தேர்தல் முடிவு கட்டும்.'இண்டியா' கூட்டணியில் மற்ற தலைவர்கள் இருக்கிற இடமே தெரியவில்லை... ஸ்டாலின் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற அழைத்துக் கொண்டிருக்கிறார்!தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'ஜனநாயகம் என்ற சீதையை மீட்க, கலியுக ராமனாக ஸ்டாலின் வில்லேந்தி வருகிறார்' என, ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார். அந்த ஜனநாயகத்தை கடத்தி சென்றதே, கலியுக ராமன் தானே. ராமனை கற்பனை கதாபாத்திரம் என்ற தி.மு.க., தற்போது ஸ்டாலினையும் கற்பனை கதாபாத்திரமாக்கி விட்டதே.இலக்கிய ஞானம் உள்ளவர் என்பதால் ஒரு, 'புளோ'வில் சொல்லிட்டார்... அதற்குன்னு இப்படியா நையாண்டி பண்ணுவீங்க!முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: வேட்பாளர்களின் சொத்து பட்டியலை, பேப்பர்ல வேற போட்டு விட்டுடுறாங்க. அதை படிச்சுப்புட்டு, ஓட்டுக்கு எவ்வளவு கேட்கலாம்னு, அவனவன் குடும்பத்தோடு உட்கார்ந்து டிஸ்கஷன் பண்றானுங்க.உண்மை தான்... அ.தி.மு.க.,எல்லா தொகுதிக்கும், 'பசை' உள்ள பார்ட்டிகளை வேட் பாளராக்கி பணத்தை வாரி வழங்கினாலும் ஆச்சரியமில்ல... ராமநாதபுரத்தில் இவங்க தலைவர் நிலைமை எப்படி?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை