உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்கள்; கடந்து செல்வதாக கடிதம் எழுதினார் முதல்வர்!

வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்கள்; கடந்து செல்வதாக கடிதம் எழுதினார் முதல்வர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வதந்திகளைப் பரப்புகிறார்கள். வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார்' என, தன் கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது கடிதம்:

வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி என்கிற இலக்கை அடைவதற்கு சாதாரண உழைப்பு போதாது, சதிகளை முறியடிக்கக்கூடிய சளைக்காத உழைப்பு தேவை என்பதை விருதுநகர் உடன்பிறப்புகளிடம் எடுத்துரைத்தேன். விருதுநகர் மாவட்டத்தில் கழகம் தொடர்ந்து வெற்றி பெறும் தொகுதிகளான விருதுநகர், திருச்சுழி மற்றும் ராஜபாளையம் தொகுதிகளுக்குட்பட்ட நிர்வாகிகளையும் பாராட்டி, அந்த இரு தொகுதிகளின் வெற்றியைத் தக்க வைத்துக்கெள்வதுடன், மாவட்டத்தின் மற்ற தொகுதிகளிலும் 2026ல் நிச்சய வெற்றி என்பதை உறுதி செய்யும் வகையில் உழைக்க வேண்டியதை உங்களில் ஒருவனாக வலியுறுத்தினேன்.

தன் நிலை மறந்து விமர்சனம்

நியாயமாகக் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஒருவர் கூட விடுபடுதல் கூடாது என்ற அக்கறை முதல்வராக எனக்கு மட்டுமல்ல, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரை இருப்பதால் மக்களின் தேவையறிந்து நிறைவேற்ற முடிகிறது. இதனைப் பொறுக்க முடியாமல்தான் அரசியலில் எதிர்முகாமில் இருப்பவர்கள் வன்மத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார். கருணாநிதி பெயரிலான திட்டங்களும், கட்டடங்களும் மக்களுக்குப் பெரும் பயன் அளிப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், கருணாநிதி பெயரை வைப்பதா என அநாவசியமாகப் பொங்குகிறார்.

வயிற்றெரிச்சல்காரர்

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தையும் முன்பை விடச் சிறப்பாக நடத்தி வருவது திராவிட மாடல் ஆட்சிதான். பண்பாடே இல்லாமல் அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களைப் போல எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் பேசுவதையும், இப்படிப்பட்டவருடன் ஜனநாயக மாண்புமிக்க சட்டமன்றத்திலும் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதையும் எண்ணியும் வேதனைப்படுகிறேன். வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களைக் கடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

சரித்திரம் தொடரட்டும்

மக்கள் நம் பக்கம் இருப்பதால்தான் மாற்று முகாம் கலக்கத்தில் என்னன்னவோ பேசுகிறது. ஆனால், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை உலகம் அறிந்திருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும். அதனால்தான் ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப் பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம். கழக ஆட்சியின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

skv srinivasankrishnaveni
நவ 13, 2024 10:00

கடவுளே ப்ளீஸ் எங்க தமிழ்நாட்டு மக்களை காக்கவேண்டும் சாமி என்றைக்கு தான் இதுக்களுக்கு அறிவு தெளிவாகும்ணே தெரியலீங்களே 80% டாஸ்மாக்வாசிகளே நல்லவா வந்தால் சாராயம் போஓடுமென்ற எண்ணத்துலேதான் பத்திலேயே வருமோ ஆறேதான் ஓட்டுபோடுறானுகப்போல நோ திமுக ஆர் அதிமுக கூட்டணி ன்னு நிக்கறது ஒழியுமோ அன்றாய்கேதான் விமோசனம் தமிழ்நாட்டுக்கும் தமிழனுக்கும்


RAAJ68
நவ 13, 2024 04:21

எவ்வளவு வருடங்களாக இருநூறு? விலை வாசி ஏறி விட்டது. சரக்கு விலையையும் ஏற்றி விட்டது அரசு. எனவே ஐநூறாக கூட்டிக் கடுங்கள்


வைகுண்டேஸ்வரன்
நவ 12, 2024 20:18

ஸ்டாலின் அவர்களின் ஆட்சி இதுவரை சிறப்பாகத் தான் இருக்கிறது. ஆங்காங்கே சில குறைகள் இருக்கலாம். By and large, Stalin runs a good government. அதனாலேயே, எதிர்க்கட்சிகள் வெறுப்பு, வன்மம் கக்குகிறார்கள். ஆட்சியை விமர்சியுங்கள், ஆட்சியாளர்களை அல்ல.


sankar
நவ 12, 2024 21:46

இருநூறுக்கு இவ்ளோவா


krishna
நவ 13, 2024 00:05

200 ROOVAA COOLIKKU 2 KODI ROOVAA COOLIE POLA KOOVURA


theruvasagan
நவ 13, 2024 08:43

குடுத்ந காசுக்கு மேல கூவுறதுல அது வெறும் 200 ஓவாவா இருந்தாலும் சரி அவங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.


அப்பாவி
நவ 12, 2024 19:31

தலைமுறை தலைமுறையா நீங்களே ஆண்டு அனுபவிச்சா வயிறு என்ன உடம்பே பத்தி எரியுது. என்னிக்கி விடியுமோ?


Kumar Kumzi
நவ 12, 2024 18:32

எதிர் கட்சியாக நீங்க இருந்த பொது நீங்க சொல்லாத பொய்களை விடவா நீங்க மறந்திருக்கலாம் ஆனால் நாங்க மறக்க மாட்டோம்


hari
நவ 12, 2024 16:54

ஆமாம் அப்படித்தான்... சட்டையை கிழிகாமல்.. அவியல் செய்யாமல் ....


Barakat Ali
நவ 12, 2024 15:07

நீங்க செஞ்சா அதுக்கு பேரு விமர்சனம் ....... அதையே மத்தவங்க செஞ்சா அது வன்மம் கக்குவதா ???? அப்போ எதிரிகளின் விமர்சனத்தில் இருக்குற நியாயம் சுடுது இல்லையா ????


Ganapathy Subramanian
நவ 12, 2024 14:41

பண்பாடே இல்லாமல் அநாகரிகமாக பேசுவதையே அரசியல் கொள்கையாக கொண்டிருக்கும் சிலர் - முதல்வர் தன்னையே சொல்லிக்கொள்கிறாரோ?


Nandakumar Naidu.
நவ 12, 2024 14:26

வன்மத்தின் உடன் பிறப்பாகத்தானே இருந்தார். இப்போது என்னமோ உத்தமர் போல பேசுகிறார், எழுதுகிறார்,நடிக்கிறார். தமிழகத்திற்கு எப்போது விடியல் வருமோ தெரியவில்லை.


எஸ் எஸ்
நவ 12, 2024 14:21

காங்கிரஸ் தனித்து நின்றால் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. 2014 இல் இது நிரூபணம் ஆனது


Suppan
நவ 12, 2024 15:58

தனித்து நிற்க காங்கிரசுக்கு தைரியம் இருக்கிறதா என்ன? எல்லா தலைவர்களும் திமுகவுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் . இவர்கள் காங்கிரஸ் கடையை மூடிவிட்டு திமுகவிலேயே சேர்ந்துவிடலாம் .


சமீபத்திய செய்தி