உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலில் மூழ்கிய இலங்கை படகு; சுற்றுலா பயணிகள் உயிர் தப்பிய திக்...திக்...காட்சி!

கடலில் மூழ்கிய இலங்கை படகு; சுற்றுலா பயணிகள் உயிர் தப்பிய திக்...திக்...காட்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: கடலில் மூழ்கிய இலங்கை படகில் இருந்த சுற்றுலா பயணிகள் உட்பட 14 பேர் உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.இலங்கையில், யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான படகில் இன்று காலை சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தனர். நெடுந்தீவுக்கு சென்றுவிட்டு சிறிது நேரம் சுற்றிப்பார்த்து விட்டு திரும்பிய போது, படகில் கோளாறு ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=80fu5cj3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு சில நிமிடங்களில் படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. அதில் இருந்த ஊழியர்கள், சற்று தொலைவில் வேறு ஒரு படகு வருவதை கண்டனர். அந்த படகில் இருப்பவர்களுக்கு தென்படும் வகையில் பெரிய வெள்ளைத்துணியை ஆட்டினர். வெள்ளைக்கொடி காட்டப்படுவதை கண்டதும், தொலைவில் படகில் வந்தவர்கள், 'ஏதோ விபரீதம்' என்பதை புரிந்து கொண்டு அருகில் வந்தனர்.பக்கத்தில் வந்ததும், 'எங்கள் படகு மூழ்குகிறது, எங்களை காப்பாற்றுங்கள்' என்று சுற்றுலா படகில் இருந்தவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, சுற்றுலா பயணிகள், படகு ஊழியர்கள் என 14 பேரும் காப்பாற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும், இலங்கை குறிகாட்டுவானை துறைமுகத்தில் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர்.சுற்றுலா பயணிகள், மூழ்கும் படகில் இருந்து காப்பாற்றப்படும் திடுக் காட்சிகள், மீட்பு படகில் இருந்தவர்களால் படம் பிடிக்கப்பட்டன. அந்த திக்...திக்... காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SANKAR
ஜூலை 13, 2025 14:02

normally it is mandatory to have life jackets and radio..


Ramesh Sargam
ஜூலை 13, 2025 13:09

எங்கிருந்தோ வந்த படகில் இருந்தவர்கள் மூழ்கியவர்களை காப்பாற்றி இருக்கிறார்கள். அந்த எங்கிருந்தோ வேறு யாரும் இல்லை. கடவுளின் சீடர்கள். ஆயிரம் கோடி வணக்கம் அவர்களுக்கு. இறைவா அவர்களை அங்கு எங்கிருந்தோ அனுப்பியதற்கு மிக்க நன்றி.


Jack
ஜூலை 13, 2025 13:42

அந்த ஏரியா எந்த கடவுளின் கட்டுப்பாட்டில் வருது ?


SANKAR
ஜூலை 13, 2025 15:12

whole world under control of God.He decides whom to save and when!


ஜெயராம்,திருநகர் மதுரை
ஜூலை 13, 2025 16:57

ராமர் என்ற கடவுளின் கட்டுப்பாட்டில் வருகிறது.


சமீபத்திய செய்தி