உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  புராணகிலாவிற்கு விஜயம் செய்த ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி

 புராணகிலாவிற்கு விஜயம் செய்த ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, நேற்று முன்தினம் புராணகிலாவிற்கு விஜயம் செய்தார். ஸ்ரீ ஆசார்யார் அங்கு கால்பதித்தவுடன், ''இதுவே இந்திரப்ரஸ்தம்... இது நம் இதிகாச பூமி,” என்றார். ஸ்ரீ ஆசார்யாரை, இந்திய தொல்லியல் துறை இயக்குநர் வசந்த் ஸ்வர்ணகரர் வரவேற்றார். புராணகிலா அகழாய்வு களத்தில் வைக்கப்பட்டிருக்கும், பல்வேறு பேரரசுகளின் காலகட்டத்தை சார்ந்த தொல்பொருட்களை சுவாமி பார்வையிட்டார். வசந்த் மற்றும் பட்டேல் ஆகியோர், அகழாய்வு செயல்முறை எவ்வாறு நடைபெறுகிறது, அதற்கு தேவையான சான்றுகள் மற்றும் தர அடிப்படைகள் என்ன என்பதையும் விளக்கினர். புராதன கல்வெட்டுகள் மற்றும் அருங்காட்சியகத்தையும், ஸ்ரீ ஆசார்யார் பார்வையிட்டார். பின், அதிகாரிகளுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து, ஸ்ரீ ஆசார்யர் தர்ம மஹாவித்யாலய பாடசாலை மற்றும் விகாஸ்புரி வேதபாடசாலை ஆகியவற்றிற்கு விஜயம் செய்து, கல்வி பயிலும் வித்யார்த்திகளுக்கு, “வேதங்களைப் பயின்று, அதில் கூறிய வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுபவன் வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியுற மாட்டான். “உலகம் இதுவரை அப்படி பயின்ற ஒரு வேதவித்வானை வறுமையிலும், துன்பத்திலும் பார்த்த தில்லை,” என்று அருளுரை வழங்கினார். அதன்பின், விகாஸ்புரி மூகாம்பிகை கோவிலை தரிசித்தார். ஸ்ரீ சிருங்கேரி வித்யா கேந்த்ராவில் தரிசனத்திற்காக திரளாக வந்திருந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அன்பர்களை ஆசீர்வதித்து உரையாற்றினார். - நமது நிருபர் --:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ