உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரட்டை செயலி மேம்பட்டதாக இருக்கும்: ஸோகோ ஸ்ரீதர் வேம்பு உறுதி

அரட்டை செயலி மேம்பட்டதாக இருக்கும்: ஸோகோ ஸ்ரீதர் வேம்பு உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஸோகோவின் அரட்டை செயலி ஏகபோகமாக இருக்காது. அரட்டை செயலியை மேம்பட்டதாக மாற்றுவதை இலக்காக கொண்டுள்ளோம் என ஸோகோ மற்றும் அரட்டை செயலி நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.ஸோகோ பாக்கியுள்ள சமூக வலைத்தள செயலியான அரட்டை, இந்திய அளவில் முக்கியமானதாக கால் பதித்து அபார வளர்ச்சியை எட்டி வருகிறது. கடந்த 3 நாட்களில் இந்த செயலியை டவுண்லோடு செய்பவர்களின் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டு வருகிறது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சுதேசி செயலியான அரட்டைக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், அரட்டை செயலி குறித்து அந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அரட்டை செயலி யுபிஐ மற்றும் மின்னஞ்சல் போல சிறப்பாக இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும். செய்தி நெறிமுறைகளை தரப்படுத்தவும் வெளியிடவும் நாங்கள் யுபிஐ செயலியில் தொழில்நுட்பப் பணிகளைச் செய்த iSpirt குழுவைச் சேர்ந்த ஷரத் சர்மாவுடன் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளோம். நான் யுபிஐயின் மிகப்பெரிய ரசிகன். அந்தக் குழு செய்த பணியை நான் மிகவும் மதிக்கிறேன். ஷரத் ஒரு நல்ல நண்பர். இன்றைய வாட்ஸ்அப் போல் இருக்க கூடாது. நாங்கள் ஒருபோதும் ஏகபோகமாக இருக்க விரும்பவில்லை. அரட்டை செயலியை மேம்பட்டதாக மாற்றுவதை இலக்காக கொண்டுள்ளோம். இந்த இலக்கை அடைய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், இதைச் சாத்தியமாக்க iSpirt-உடன் இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

Made in India, Made for World

மற்றொரு பதிவில் ஸோகோ மற்றும் அரட்டை செயலி நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியதாவது: ஸோகோ தயாரிப்புகள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. எங்கள் சர்வதேச தலைமையகம் சென்னையில் உள்ளது. உலகளாவிய வருவாய்க்கு மொத்த வரியையும் இந்தியாவில் தான் செலுத்துகிறோம்.80 நாடுகளில் எங்களது அலுவலகம் செயல்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்களின் டேட்டா முழுவதும் இந்தியாவில் தான் கையாளப்படுகிறது. 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, உலகத்திற்காக தயாரிக்கப்பட்டது' என்று நாங்கள் பெருமையுடன் சொல்வோம். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Trichy
செப் 30, 2025 18:01

வாழ்த்துக்கள் , தமிழ்நாட்டில் உள்ள இளம் வயதினருக்கு தன்நம்பிக்கை அளித்து வழிகாட்டியாக இருக்கவேண்டும் .


பெரிய குத்தூசி
செப் 30, 2025 17:12

வாழ்த்துக்கள் ஸ்ரீதர் வேம்பு சார், உங்கள் தந்தை தெய்வத்திரு சாம்பமூர்த்தி வேம்பு ஐயா அவர்களின் சொந்த ஊர் ஒழுகச்சேரி அருகில் உள்ள அணைக்கரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை படுகிறேன். உண்மையான தேசபக்தர்களுக்கு தடையே கிடையாது. வானமே எல்லை என்பதை நிரூபித்துக்கொண்டு உள்ளீர்கள். இந்தியாவை நேசிப்பவர்களை பாரத தாய் என்றுமே கைவிட்டதில்லை.


Madras Madra
செப் 30, 2025 15:20

வாழ்த்துக்கள் சுதேசி இந்தியன் சுய மரியாதை இந்தியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை