உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்ரீவி., ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஸ்ரீவி., ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மவாட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவை முன்னிட்டு நேற்று காலை 9:20 மணிக்கு கொடிபட்டம் மாடவீதிகள், ரத வீதிகள் சுற்றி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. கொடி மரம் முன் சிறப்பு பூஜைகள் செய்து சுதர்சன் பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். பின்னர் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.விழாவில் அறங்காவலர் நளாயினி, முத்துபட்டர், ரகு பட்டர், வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ், வெங்கடேசன், அறநிலையத்துறை அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.விழா துவங்கியதையடுத்து தினமும் காலை 9:00 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடக்கிறது. மார்ச் 25 காலை 7:00 மணிக்கு செப்பு தேரோட்டம், அன்றிரவு 7:00 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் ஆடிப்பூர பந்தலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும், மார்ச் 29 மாலை 6:00 மணிக்கு குறடு மண்டபத்தில் புஷ்ப யாகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் அலுவலர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்