உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிஜிபியிடம் கதறி அழுத எஸ்எஸ்ஐ மனைவி

டிஜிபியிடம் கதறி அழுத எஸ்எஸ்ஐ மனைவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உடுமலை: உடுமலை அருகே கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி செலுத்தினார். அப்போது, சண்முகவேல் மனைவி கதறி அழுத வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில்தொழவு ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கனுத்து பகுதியில் மடத்துகுளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு பணியாற்றிய திணடுக்கல்லை சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் மணிகண்டன், தங்கபாண்டி பணியாற்றி வந்தனர். நேற்று இரவு, தந்தை மகன்கள் இடையே மோதல் ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0q4sx7fh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக தோட்டத்து உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில், குடிமங்கலம் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார். பிரச்னை முடிந்து கிளம்பும் போது, குடிபோதையில் இருந்த மணிகண்டன் உள்ளிட்டோர் சண்முகவேலை வெட்டிக் கொலை செய்தனர். சம்பவ இடத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மேற்கு மண்டல டிஐஜி சசிமோகன் , எஸ்பி யாதவ் கிரீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரித்தனர். இக்கொலை சம்பவத்தில் மூர்த்தி மற்றும் மணிகண்டன் எஸ்பி அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.இந்நிலையில், சண்முகவேல் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர். அப்போது, சங்கர்ஜிவாலிடம்,சண்முகவேலின் மனைவி கதறி அழுதார். இதன் பிறகு அரசு மரியாதை உடன் சண்முகவேல் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பெரிய ராசு
ஆக 08, 2025 20:36

செவிடன் காதில் சங்கு ஊதுவது போலத்தான்


Kasimani Baskaran
ஆக 07, 2025 04:14

ஒருபக்கம் அடாவடி செய்யும் காவலர்கள். அடுத்த பக்கம் அடிவாங்கும் அப்பாவி காவலர்கள். நிர்வாகம் செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 06, 2025 22:08

பாவம் டிஜிபி. அவர் என்ன செய்வார். மந்திரிகளாலேயே கட்டுபடுத்த முடியவில்லை.


முருகன்
ஆக 06, 2025 21:17

கொலையாளிகளை உடனடியாக என்கவுண்டர் செய்ய வேண்டும் காவல்துறை கண்ணியத்தை காக்க வேண்டும்


முக்கிய வீடியோ