உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேக்கம்!

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்கி உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. அங்குள்ள டாக்டர்கள், நர்சுகள் மற்றும் நோயாளிகளுடன் கலந்துரையாடினேன். சவாலான நேரத்தில் ஓய்வில்லாமல் பணியாற்றிய டாக்டர்கள் மற்றும் அவர்களது குழுவினருக்கு பாராட்டுகள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=te9bvibr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த பிரச்னைக்கு தீர்வு காண 300 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை ரூ.110 கோடி செலவில் கட்டப்படுகிறது. இது கட்டுமானத்தில் உள்ளது. அடுத்தாண்டு முதல் செயல்பட துவங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
நவ 30, 2024 20:20

அடுத்தாண்டு முதல் செயல்பட துவங்கும் அந்த ரூ. 110 கோடி புதிய மருத்துவமனையின் தரத்தை அடுத்த மழையின் போது நாம் பார்க்கத்தானே போகிறோம்.


Nagarajan D
நவ 30, 2024 20:20

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி.... பெருமழையின் போது இப்படி நான் சொல்வது குற்றம் தான். எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் நிலைமை இப்படி தான் இருக்கும்... ஆனால் திரு ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அவர் பேசிய பேச்சு இப்படி நம்மை யோசிக்க வைக்கிறது


சாண்டில்யன்
நவ 30, 2024 19:43

எழும்பூர் பிளாட்பாரத்தில் நீர் சூழ்ந்துள்ளது. அமைச்சர் அஷ்வினி வைணவருக்கு தெரிந்திருக்குமா?


sankar
நவ 30, 2024 19:32

இயற்கை குளிர்சாதனம்


sundar
நவ 30, 2024 19:10

மழையைக் கைது செய்தால் சரியாகிவிடும்.துக்ளக் ஆட்சியில் இது தான் நடக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை