உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோல்வி பயத்தில் பா.ஜ., கூட்டணி பற்றியே எப்போதும் பேசுகிறார் ஸ்டாலின்; நயினார் நாகேந்திரன் பேட்டி

தோல்வி பயத்தில் பா.ஜ., கூட்டணி பற்றியே எப்போதும் பேசுகிறார் ஸ்டாலின்; நயினார் நாகேந்திரன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: ''முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியை பற்றியே பேசி வருகிறார்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k35lzxys&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து நிருபர்களுக்கு நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஈரோட்டில் வயதான தம்பதி கொலை மற்றும் திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கொலை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு சான்று. இந்த கொலை வழக்கில் இன்று வரை தீர்வு காணவில்லை. முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியை பற்றியே பேசி வருகிறார். மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். திருநெல்வேலியில் குடிக்க தண்ணீர் இல்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிக்க தண்ணீர் இல்லை. இதில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அக்கறை காட்டாமல், தேர்தல் கூட்டணியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் அடுத்த ஓராண்டு தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள், அவரவர் தொகுதிகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பது, கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை என்பதையே எடுத்துரைக்கிறது. கவர்னரை பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்துவிட்டு, தற்போது கவர்னரிடம் அதிகார போட்டி இல்லை என்று முதல்வர் சொல்வதை எந்த வகையில் ஏற்றுக்கொள்வது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RAMAKRISHNAN NATESAN
மே 04, 2025 13:52

2026 இல் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி ..... மத்தியில் இருப்பதோ பாஜக கூட்டணி ஆட்சி ....... அமலாக்கம், சி பி ஐ எல்லாம் குதறிப் போட்டுடுவாங்களே ..... பெருசா ஒண்ணும் ஆயிடாது ன்னாலும் கட்டிங் நிறைய கொடுக்க வேண்டி வருமே என்பது எங்கள் மன்னரின் கவலை .... அதனால்தான் மன்னருக்கு உதறல் .... அதனால் திமுகவின் கூடாரம் கதறல் .....


thottijaya
மே 04, 2025 13:47

vj become 26 cm no comments


TMM
மே 04, 2025 13:20

எப்பப்பார்தாலும் BJP


Svs Yaadum oore
மே 04, 2025 13:13

குளைச்சல் துறைமுகம் இங்கு வராமல் தடுத்து அந்த துறைமுகம் கேரளா விழிஞ்சம் செல்ல காரணம் யார் ??..... குளைச்சல் துறைமுகம் மேம்படுத்தி பன்னாட்டுத் துறைமுகமாக மாற்ற பொன்னார் முயற்சி மேற்கொண்ட போது, அது சுற்றுச்சூழல் சீர்கேடு என்று கூறி, அங்குள்ள மதம் மாற்றிகள் எதிர்க்கட்சி திமுக என்று எல்லோரும் சேர்ந்து அதை தடுத்தனர்....கேரளா விழிஞ்சம் துறைமுகம் அமைக்க ஜல்லி கன்யாகுமரி மலையை வெட்டி இங்கிருந்து அனுப்பினார்கள் .இப்பொது கன்யாகுமரியில் குடிக்க தண்ணீர் இல்லையாம் ... ...இதற்கு விடியல் மதம் மாற்றிகள் பதில் என்ன ??....


Svs Yaadum oore
மே 04, 2025 13:12

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிக்க தண்ணீர் இல்லை ....எப்படி இருக்கும் ??....கன்யாகுமரியில் உள்ள மலையை வெட்டி அதை கேரளாவுக்கு ஏற்றுமதி ....பிறகு நீர் வளம் எப்படி பெருகும்?? ....கேரளா விழிஞ்சம் துறைமுகம் அமைக்க ஜல்லி கன்யாகுமரி மலையை வெட்டி இங்கிருந்து அனுப்பினார்கள் ..சுற்றுச்சூழல் சீர்கேடு என்று கூறி, குளச்சல் துறைமுகம் வராமல் தடுத்தார்கள் ....இதற்கு அங்குள்ள விடியல் மதம் மாற்றிகள் பதில் என்ன ??,....


sridhar
மே 04, 2025 16:42

குமரி மாவட்ட மக்களுக்கு அந்த விழிப்புணர்வு இல்லை , மத ரீதியாக திமுகவுக்கு வோட்டு போட்டு நாசமா போனவங்க .


Kumar
மே 04, 2025 13:08

எதிர் கட்சி எல்லாம் தோல்வி பயத்தில் தான் வாழும் போல


அப்பாவி
மே 04, 2025 12:56

எல்லோரும் அடுத்தவனுக்கு தோல்வி பயம்னு பேசியே பொழுதப் போக்குங்க. தேர்தல் முடிஞ்சி ரிசல்ட் வர்ர வரைக்கும் உதார் உட்டுக்கினே இருங்க.


velraj
மே 04, 2025 13:46

vj become cm no comments


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை